Saturday, January 28, 2012

வடக்கும் ஒரு குருவியும்


Share/Bookmark
அந்த வெளிகளில்
குருவி என்ன செய்கிறது...

எதையோ கொத்துகிறது..
எதையோ விழுங்குகிறது...

துள்ளி .. துள்ளி...
அதோ மீண்டும் கொத்துகிறது...

மெதுவாய் சிறகசைத்து
கொஞ்சம் மேலெழுந்து
அதோ மீண்டும் அமர்ந்துவிட்டது...

மீண்டும் கொத்துகிறது...
இலகுவாய் சத்தமிடுகிறது...

சுற்றி.. சுற்றி...
எதையோ தேடுகிறது...

ஐயோ!!!
நான் பார்ப்பதை
அது எப்படி கண்டது...

எனது பார்வை
அதன் சுதந்திர்த்தை
கொஞ்சமாய் எடுத்துக் கொண்டது
என்னவோ உண்மைதான்

ஐயோ!!!
என்ன பாதகன் நான்...

முழுமையான் சுத‌ந்திர‌ம் தேடி
அது மேலெழுந்து ப‌ற‌க்கிற‌தே...

முழுமையான் த‌னிமையை
வெறுமையான மௌன‌த்தை
என‌து நாட்டில் - அது
எங்கு போய் தேடும்

அது ப‌ற‌ந்த‌ திசையில்
வானத்தை பார்த்தேன்...

அது
இய‌ற்கையாக‌வேதான்
இருந்த‌து...

ஏதோ ஒரு ம‌கிழ்ச்சி...

அந்த‌க் குருவி
வ‌ட‌க்கு நோக்கிப் ப‌ற‌க்க‌வில்லை.....


நெருடல்களின் தொடராகிப் போன வடக்கை நோக்கிய குருவிக்கான என் பேனையின் சுப சோபனம்......