Tuesday, May 28, 2013

அந்த மாநாட்டில் நான் வரையப்படுகிறேன்


Share/Bookmark



அதோ ஒரு மாநாடு
......
நிலவை வரைவதுதான்
அவர்கள் தீர்மானம்

ஒரு அகண்ட காகிதம்
..........
எனது வெளிகளைப் போல
வெண்மையாகவும் வெறுமையாகவும்


அதோ வரைய
ஆரம்பிக்கிறார்கள்

நிலாவென்று சொல்லி
ஒருவர் முட்டையை வரைகிறார்
அது அங்கீகரிக்கப்படுகிறது

வானம்
வர்னம் தீட்டப் படுகிறது
வந்தோர் வரவேற்றனர்

வாயிருந்திருந்தால்
.........
அந்த வானம்
அழுதிருக்கும்


வந்தவாரெல்லம் வரைந்து
வசதியானவாரெல்லாம் வைத்து
வானம் அழகாகிவிட்டது


பாவம் அந்த நிலவு
பக்குவமாய் மறைக்கப் பட்டது

முழு நிலவை
முட்டையாக்கி
........
முட்டை நிலவை
மூடிமறைத்து

பிழைகளில்லாமல்
பிரதிகளடித்து

பின்னிரவாய்ப் பார்த்து
வினியோகம் செய்து

விடியலின் மடியில்
விரைந்து படுத்தனர்

பிரதிகள்
காற்றில் அடிபட்டு
பின்னொரு நாளில்
நிலவில் படிந்தன‌

விந்திற் பிறந்த
வீணர்களுக்காய்
வின்னே வாழ்வான  வென்னிலவு
விம்மி விம்மி அழுகிறது

நாய்களைத் திட்டலாம்
நாயகம் தடுத்து விட்டார் ***

அதோ
அந்த அகதிநிலா
தனது வெளிகளில் மௌனிக்கிறது

28 05 2013


*** யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதையே பேசட்டும் இல்லையேல் வாய் மூடி மௌனமாக இருக்கட்டும். (புஹாரி, முஸ்லிம்)