Sunday, September 7, 2014

ஷஹீத் செய்யித் குதுப்


Share/Bookmark
கத்த வீட்டிலும்
கந்தூரி வைபவத்திலும்
காணாமல் போன‌
கடவுள் கொள்கைக்கு
கலிமாச் சொல்லிக் கொடுத்தவரே

ஆட்சி பீடத்தில்
அதையமர்த்த‌
அரும் பாடு பட்டவரே

கவலைகளையும்
கண்ணீரையும்
காகிதங்களில் எழுதிவிட்டு
காணாமல் போனவரே

கல்விப் பரப்பில்
கலிமாவைக் கண்ண்டவரே
கலையாழத்தில்
கடவுளைச் செய்தவரே

எண்ணையில் விழுந்து
எரிந்து போகச் சம்மதம் சொன்ன
ஸஹாபாக்கள் போல . . .

கயிறு உங்கள்
கழுத்தை நெறிக்கக்
கலங்காமல் நின்றவரே

கயிறு கொண்டு வந்தவனுக்கே
கலிமா சொல்லிக் கொடுத்தவரே

செய்யித் குதுப் - நீங்கள்
செய்ததெல்லம் குதுப்*

பல் தேசம் சென்று நீர்
பயின்று வந்தீர்....

மானுடம் சிறக்க
மடமைகள் அகற்றும்
"இந்த மார்க்கம்" ** - என்று
இனிதாய்ச் சொன்னீர்

அன்புத் தங்கை*** வந்து
ஆறுதல்சொன்ன போது

உண்மைத் தத்துவங்களை
உயிர்ப் பிரவாகங்களாய்****
இரத்தத்தில் மையெடுத்து
இலக்கியம் செய்தவரே

குர்ஆனிய நிழலில்***** - நீர்
குதூகலமாய் வாழ்ந்துவிட்டு
தம்பெற்ற இன்பம்
பெருக இவ்வைய‌கமேயென‌
தவனை முறையில் எழுதிப்
பேரிலக்கியன் செய்தவரே

மனுக்குலத்தை ஆள‌
மறை நூலொன்று போதுமென்று
மஆலிம் பித்தரீக்கில்******
மனுச் செய்து - பின்
மௌத்தாகிப் போனவரே

அறபுக்கோர்
அகிலக் கவிஞன்
இக்பால் இல்லையென்ற
இழிவைப் போக்க
இலக்கியம் செய்தீரே

பாரதி இல்லையென்ற
பழியைத் நீக்க
பாவெழுதித் தீர்த்தீரே

காவு கொள்ள முடியாத
கருத்தையல்லவா - நீங்கள்
கலியுலகில் விட்டுச் சென்றீர்

கடைசி மூச்சுக்
கழுத்தையிறுக்க
கலிமாவுக்காக‌வே
கயிற்றில் தொங்கினீரே

நித்தியனுக்காய்
நீங்கள் செய்த வரிகளை
நீக்க மறுத்ததனால்

ஷஹாதத்தைப் பெரும்
சன்மானமாகப் பெற்றரீரே

வேட்டை நாய்கள் உங்களை
வெறிகொண்டு துரத்தும் போது
சுவன வாசல் திறந்திருப்பதாக்
சுப சோபனம் சொன்னவர் யார்

உஙகள் மீது - எனக்கு
உருவான காதல் - இன்னும்
உறுதியாக உறுதியாக - புது
உத்வேகம் பிறக்கிற‌தே

ஊதாரித்தனமாய் - வெறுமனே
உலரித்திரிந்த என்னை
உங்கள் கருத்துகள் தானே
ஊக்கம் தந்து உயர்த்திவிட்டன.

உங்களை எழுதும் போது
எனது எழுது கோளில் ஏனோ
புதிதாய் உதிரம் பாய்கிறது

எனது எழுத்துகளில் ஏனோ
புதுத் தெம்பு பிறக்கிறது

உங்கள் வாழ்க்கை
உணர்வைத் தூண்டுகிறது
உங்கள் மரணம்
ஊக்கம் தருகிறது

நீங்கள்
செய்யத் துடித்தீர்கள் - அதற்காய்
செத்து மடிந்தீர்கள்.........

1966.08.29 தூக்கிலிடப்பட்ட ஷஹீத் செய்யித் குதுப் நினைவாக என் பேனை எழுதியவை
புகழனைத்தும் அல்லஹ்வுக்கே உரியவை...............

அகதிநிலா
20140829


மனிதன் தனக்காக‌ மட்டும் வாழும் போது, அவ‌னது ஜனனத்தில் உதிக்கும் வாழ்க்கை அவ‌னது மரணத்தோடு மறைந்து போகிறது.......ஒரு சிந்தனைக்காக அவன் வாழுகின்ற போது, அது இந்த அண்ட வெளியின் தொடக்கத்தில் ஆரம்பமாகிறது ....... அகிலம் முடியும் வரை நீள்கிறது........

- ஷஹீத் செய்யித் குதுப் -


No comments:

Post a Comment