வெறுமையில் . . .


Share/Bookmark

வெறுமையில் நானும் எனது கவிதையும் . . .









என் வாழ்க்கை
நிரப்பப் படும் போதெல்லாம்
வெறுமையைக் கொண்டு
மீண்டும் நிரப்பிக்கொள்கிறேன்

வசந்த காலங்கள்
வறுமையாகி விடக்
கூடாதென்பதற்காய்

எதையுமே ஏற்கும்
பன்பு கொண்டதால்
வெறுமையைக் கொண்டு
மீண்டும் நிரப்பிக்கொள்கிறேன்













முழுமையான புத்தகத்தில்
எதையுமே
எழுத முடிவதில்லையே

அதனால்தான்

வெறுமையான புத்தகத்தை
மீண்டும் வாங்கிக் கொள்கிறேன்













வெறுமையாக இருப்பதால்தான்
வேற்றுமையின்றி சிரிக்க முடிகிறது













பாலையின் வெறுமைதானே
கோடையின் வசந்தம்














வெறுமையாக்கப்படாத
வாழ்க்கை எப்படி
மீண்டும் ஆரம்பிக்கப்படும்

மீண்டும் மீண்டும்
வாழ்ந்து கொள்வதற்காய்
நான் வெறுமையைத்தான்
தினம் காதலிக்கிறேன்













வெறுமையான வானத்தில்தான்
தண்ணீர் சுத்தமாக்கப்படுகிறது













மேகம் தன்னை
வெறுமையாக்கிக்கொள்வதால்தான்
தண்ணீர்த் துளிகள்
தரையில் விழுகின்றன‌













கருப்பைகள் தன்னை
வெறுமையாக்கிக் கொள்வதால்தான்
வாழ்க்கை ஆரம்பமாகிறது















வெறுமையாகிப் போகாத
உன் இரைப்பையை
மீண்டும் எப்படி நிரப்புவாய்













வறுமையின் வாசல் கூட
வசந்த காலத்தில்
மூடப்படலாம்

வெறுமையின் வாசல்
மூடப்படுவதே இல்லை

அதனால்தான்

வசந்த காலம்
மீண்டும் மீண்டும் வரகிறது













வெறுமையாகாத
நுரையீரல் எப்படி
சுவாசித்து வாழும்

வெறுமையாகி முழுமையாதல்தான்
சுவாச ஜீவிகளின்
ஜீவனோ தந்திரம்














வெறுமையிலன்றி
ஆரம்பம் எங்கு வரும்
















வெறுமையாக்கிக் கொள்ளலின்
சிறிய முயற்சியில்தான்
உனர்ச்சி ததும்பி
உள்ளாடை நனைகிறது














வெறுமையான உள்ளம்
என்பதாலோ என்னவோ

குழந்தைகளை
அதிகம் நேசிக்கிறேன்














வெறுமையைத் தேடிய
பயணம் தானே
நவீன விஞ்ஞானம்

வின் ஓடங்களும்
ஓடும் வின்கலங்களும்
வெறுமையின் வெளிகளில்தானே














நிரப்புதலாலன்றி
வெறுமை எப்படி அழியும்














வெறுமையில் மட்டுந்தான்
சிந்தனை சிறகடித்து பறக்கும்

















மல கூடங்களும்
சலகூடங்களும்
வெறுமையாக்குதெலுக்கென்றுதானே
விரிவிபடுத்தப்படுகின்றன‌














வெறுமையாகிப் போன
வீதிதானே கொழும்பு
மா நகரின் ஏக்கம்



















வெறுமையை
நேசிக்காத பேனை
எப்படி
தொடர்ந்து எழுதும்














வெறுமையிலன்றி
காகிதம்
கவிதையை
எப்படிப் பதியும்














இரவின் வெறுமைகளில்தான்
விடியல் பிறக்கிறது


















நேற்று என்பது
வெறுமையாகிப் போன காலம்...

1 comment:

  1. pal soru wendam walai plath thozai kuppayil podungal............

    and wazapla thola neee

    ReplyDelete