Wednesday, December 11, 2013

அவலமே தொடர்கிறது............


Share/Bookmark
கடி வாளம் இல்லாத‌
காலக் குதிரை
கடுகதியில் ஓடுகிறது....

வருடம் இருமுறை
வந்து பொகும்
பெரு நாள் தினமும்
பெருந்துயரோடே கழிகிறது.....

அடுப்பு எரிய
மண்ணெய் இல்லை
அரிசி வேக
மண் சட்டி இல்லை

மண்ணெய் இன்றியே
மனம் பற்றி எரிய‌
அகதி வாழ்வில்
அவலமே தொடர்கிறது...

11 12 2012

பாதகன் நீ பஞ்சத்தில் சாவ.....


Share/Bookmark

உன் கையாலாகாத
கேவலக் கூத்தை
கவிதைகள் எப்படிப் பதியும் ????

உன் பேடிமை சொல்லியே
என் ஏடுகள் தீருமே....

உன் மூத்திர்ப்போக்கிக்கு
பள்ளிக்குள் சுதந்திரம் கேட்டாய்

என்னூர்ப்
பாவாடைப் பெண்களை
பருவம் வருமுன்னே
பள்ளியறை சேர்த்தாய்

கட்டிய பசுவைக்
கடவுளென்றாய்
கரந்த பாலைக்
கழிவறை சேர்த்தாய்

பாதகன் நீ
பஞ்சத்தில்சாவ....

உன்
பாட்டன், பட்டி
பரம்பரைஅழிய.....

பக்குவமாய்ப் பார்க்கும்
பாவையவள்
பரயனோடு ஓட‌

ஒற்றுமையாய் வாழ
ஒன்னாத நீ
ஒரு நாடு கேட்டாய்

மற்றாரெல்லம்
மருந்துண்டு சாவதா

நானும் எனதுமான என்னைச் சார்ந்த சமூகமொன்றின் சாபம்

14 12 2014

Saturday, November 30, 2013

இடைவெளி


Share/Bookmark
எனது ஒரு அழுகைக்கும்
மறு அழுகைக்கும்
இடையிலான‌
இடைவெளியில்
என் கண்ணங்களை
துடைக்க மட்டுமே முடிந்திருக்க்கும்
என் கண்கள்
ஏலவே காய்ந்திராவிட்டால்.................


15 11 2013

Saturday, November 2, 2013

புனிதங்களுக்கெதிரான போராட்டம்....


Share/Bookmark
பசுக்களின் மீதுள்ள கோபத்தை
பன்றிகளிடம் காட்டுவது

புனிதமென்றால். . . .
புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .

பள்ளி நிலங்களில்
பன்றியருப்பதும்
பள்ளிச்சிறார்களை
பாலுறவுக்கழைப்பதும்தான்

புனிதமென்றால். . . .
புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .

கடவுளின் பெயரால்
களவு செய்வதும்
கடைகளின் மீது
கல்லெறிவதும்

தாடி வைத்தவர்களைத்
தண்டிப்பதும்
தொப்பி போட்டதற்காய்
தொல்லை செய்வதும்

பருவம் வந்து
பர்தா போட்டவளை
பரிகாசம் செய்வதும்

புனிதமாகிப் போகுமென்றால். . . .

புனிதங்களையெல்லாம்
புதைத்துவிட்டுப்
புத்துலகம் செய்வோம்.. .. .

புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .

22 30
24 10 2013

காத்திருப்பு ஒரு சௌகரியம். . .


Share/Bookmark
ஒரு விடியலுக்காகக்
காத்திருப்பதில்
எத்தனை சௌகரியம்
அவர்களுக்கு.......

தொடர்ந்தும்
காத்தே இருக்கிறார்கள்...........
போராடத் தயாரில்லை....................

02 10 2013

Saturday, October 12, 2013

அவன் பற்றிய நினைவுகள். . .


Share/Bookmark


10 55
22 09 2013


கை காலசைத்து
கண் விழிக்கும் பொழுதுகளிலும்

தடுமாறும் வேளைகளிலும்
தனிமையின் வெளிகளிலும்

அன்பு மிகைத்த ஓர்
அரவணைப்பிலும்
அடர்த்தியான ஒரு முத்தத்திலும்

அந்திப் பொழுதை
அடைகையிலும்
அது கழிகையிலும்

இருண்ட அறைகளிலும்
இரவின் மடிகளிலும்

இடைக்கிடை கண்விழிக்கும்
இன்பக் கனவிடையும்

எப்படித் தவிர்ந்தாலும்
எப்படியும் நடந்து விடும்
எல்லாத் தவறுகளின் போதும்

கவிதையொன்றைக்
கற்பனை செய்யும் போதும்

மின்சாரம் தடைப்பட்டு
மின் விளக்கணையும் போதும்
மீண்டும் அது வந்து
மின் விசிறி அசையும் போதும்

மழையில் நனைகையில்
மறைந்து ஒழிகையில்
மரத்தடி நிழல்களில்
மாபெரும் வெயில் வெளியில்

எப்படியெல்லாமோ
எழுந்துவிடவே செய்கிறது
அவன் பற்றிய நினைவுகள்
அல்லாஹூ அக்பர்

............

அவனை மறந்தவனாக

.............................

அடுத்த நொடிக்குள்
எனது கால்களை
எப்படி நகர்த்துவேன்
என் நுரையீரலை
எப்படி மீண்டும் நிரப்புவேன்


Saturday, September 7, 2013

தம்பிமாரே கவனம்


Share/Bookmark



தாயையும் கூட்டும்
தரங்கெட்ட செயலும்
தாயோடும் கூடும்
தான்தோன்றித்தனமும்

தசைக்கலையும் தாசிகளும்
தலை விரித்தாடும் தரணியிலே
தக்வா தடுமாறுமெனில்
தவறிப் போவீர்......தம்பிமாரே கவனம்

1139
14082013

சலிப்படைதல்


Share/Bookmark
சலிப்படைதல்

விரலிடைகளில் விரல் கோர்த்து
விலை மதிப்பற்ற ஏதோ தேடி

பின் கிடைக்காமல்
பின்னல் முடி களைந்து
பிரித்துத் தேடி

மீண்டும் ஒரு முறை
மிச்ச இடங்களில்
மிகையாய்த் தேடி

இன்னும் கிடைக்காமல்
இதழோரம் தேடி

இன்புறும் தருவாயில்
இரவு முடிந்தது

............

வின் மீன்களோடு
விளையாடி
விரசம் தீர்த்து
விரைப்பு அடங்கிய‌
விடியற்பொழுதில்

கண்ட கனவுகள்
களைந்து போகக்
கண் திறந்து பார்த்தேன்

சாரம் நனைந்ததைப் பார்த்து
சலிப்படந்து போனேன்
சற்று நேரத்தில்
சஹர் முடிந்து போகும்

12072013

மதீனா ஒன்றே தீர்வு


Share/Bookmark
அபீசீனியா என்றெண்ணி
அரபுகளிடம் போனால்
அமெரிக்காவின் அடிமாடுகள்
அடைக்கலமில்லையென்றனர்

தாயிப் வீதிகளில் நின்று
தாருமாறாய்க் கல்லெறிந்து
தஞ்சம் இல்லையென்று
தகராறு செய்தனர்

காத்தன்குடிப் பள்ளியென்ன‌
கஃபாவை உடைத்தால்கூட‌
கவலைப்பட மாட்டார்கள்
கலியுகக் கலீபாக்கள்

............

மக்கத்துக்காட்சிகளை
மியன்மாரில் கண்டது போதாதா

மறுமலர்ச்சி காண
மதீனா ஒன்றே தீர்வு

.................

உம்மத்தே முஹம்மதே
உஹதும் பத்ரும்
உன்னையழைக்கிறது
உயிர்ப்பிக்க வாருங்கள்

தரங்கெட்ட கொள்கையெல்லாம்
தரணியாள‌
தரணியாள வந்த மார்க்கம்
தனக்குள் வாழ்வதா

தீனே இஸ்லாத்தை
திசையெங்கும் பரப்புவோம்
திங்கள் தரையிலும்
தீன் கொடி ஏற்றுவோம்

தவமாய்க் கிடந்த தவங்களும்
தானாய் வளர்ந்த தாடியும்
தலைகணிந்த தொப்பியும்
தரித்திரம் பிடித்த முரன்பாடும்

துச்சமாய்க்களைந்து
தூக்கி எறியுங்கள்

துருவகற்றி உமரின் வாளை
துணிவோடு தூக்குங்கள்


1505
13082013

Wednesday, August 28, 2013

விடை கேட்கிறீர், விடியல் தாங்குமா


Share/Bookmark
வந்தோம்
வரவேற்றீர்
வளர்ந்தோம்
வாழ்த்தினீர்

வரவு செலவு பார்க்காமல்
வசந்தம் செய்யச் சொன்னீர்
வசந்தம் செய்தோம்
வரலாறு பதிந்துகொண்டது

வள்ர் மரபு பேணி
வலீமாவுக்கு அழைத்தீர்
வந்தோம்
வயிறாறக் கரி வகை
வைத்தீர்

விடை கேட்கிறீர்
விடியல் தாங்குமா

வேத நூல் சொல்லி
வேற்றுமையில்லையென்றீர்
ஒற்றுமை என்று சொல்லி
ஓதித் தினம் வந்தீர்

நானாவாகவும்
நயத்தகு வாப்பாவாகவும்
நல்லுரை தினம் சொன்னீர்

நன்றிக் கவி பாட‌
நான் வந்திருக்கிறேன்

நயமான வார்த்தையில்லை
நன்றி சொல்ல மொழியுமில்லை
நானிக் குனிகிறேன்
நான் பாடக் கவியுமில்லை

கனவுகளை அடைய‌
கடல் கடந்து போகின்றீர்

வட்டமானது வாழ்க்கை
வருமுனையில் சந்திப்போம்
வரும் வரை காத்திருப்போம்.
22082013


தனது மேற்படிப்புக்காக மலேசியா செல்லும் ஆசிரியரின் பிரியாவிடையில் பாடியது

Saturday, August 17, 2013

பிறை சாஸ்த்திரம்


Share/Bookmark


சாத்திரம் பார்த்தோமென்று
சாட்சிகளை மறுத்ததொரு கூட்டம்
பிறை பார்த்தோமென்று
பிறிந்து சென்றது மறு கூட்டம்


14 08 2013

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கிண்ணியா  ஜம்இய்யதுல் உலமா முரண்பாடு குறித்து எழுதியது

வசந்தமே நீ மீண்டும் வா. . . .


Share/Bookmark

என் அருமைக் காதலரே
எகிப்து தேசப் புதல்வரே
ஏகத்துவம் சுமந்த சகோதரரே
ஏற்றம் மிகுந்த சுஹதாக்களே

உங்கள் வீதிகளில்
உஹதைக் காண்கிறேன்
உச்ச வெயிலிலும்
உறுதியை வியக்கிறேன்

கத்ரைக்
கல்பிலே ஏற்றோரே
பத்ரைப்
பார்த்தும் சிரித்தீரே

கபனோடு உங்களைக்
காணும் போதெல்லாம்
கண் குளிர்ச்சிதான் - ஏனோ
கண்ணீரும் வருகிறதே

ஏகன் அவனையே
ஏற்றிப் புகழ்கிறேன்
ஏழைக் கரம்
ஏந்திக் கேட்கிறேன்

வசந்தம் மீண்டும்
வந்தடையக் கேட்கிறேன்......


14 08 2013

Friday, June 28, 2013

சுவனம், நான், மரணம்


Share/Bookmark

முன்னால்
தொலை தூரத்தில் சுவனம்

பின்னால்
தொடு தூரத்தில் மரணம்

சுவனம்
நித்தியப் புள்ளியொன்றில்
நிலைத்திருக்கிறது

நான்
நகர்ந்துகொண்டிருக்கிறேன்

மரணம்
நெருங்கிக் கொண்டிருக்கிறது
.............

சுவனம்
நான்
மரணம்


என்ற முப்புள்ளியில்
எல்லோர் வாழ்க்கையும்

நிர்ப்பந்தங்களைச் சுமந்த படி
நிச்சயமின்மைகளைத் தேடி
நீண்டு செல்கிறது

இடைவெளிகளில் தான்
இருக்கிறது வித்தியாசம்

20062013

Friday, June 14, 2013

'கொல்' என்பாயோ ?


Share/Bookmark


கொக்கரக்கோ கூச்சலிட்டு
கொக்கரித்து நின்றபோதும்
கொக்குப் பயலே
கொச்சைச் செருப்பு
கொஞ்சிச் சென்றது
'கொல்' என்பாயோ?

பட்டினி கிடந்த பச்சைக் குழந்தை
பல்லிளிக்குது உனைப் பார்த்து
பச்சோந்திப் பாவியே
பண்டங்கள் வேறின்றியா
பட்டணத்துச் செருப்பு
பழிவாங்கியது உன்னை

அண்டத்தைப் படைத்து
அண்டமுள்ளவற்றைப் படைத்து
அண்டங் காப்பான்
அண்டத்தை ஆட்டி
அரசாட்சிய உன்னை
அகற்றும் நேரமிது


எங்கள் தேசம் (பெப்ரவரி 15-28, 2009) 143 வது இதழில் வெளிவந்த கவிதை

என் கவிதையும் அழுதது


Share/Bookmark


ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

இருநூற்று நாற்பது கண்கள்
விதவையானதும்
ஒரே வீட்டில் தாயும் மகளும்
'இத்தா' இருந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

நூற்றி இருபது 'கப்று'கள்
ஒரே மண்ணில் தோண்டப்பட்டதும்
ஒரே நொடிப் பொழுதினில்
தந்தையும் மகனும் 'கலிமா' மொழிந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

விடுதலைப் புலிகள் வீரமிழந்து
முதுகில் சுட்டதும்
ஏகே போட்டிசெவன்கள்
தலை குனிந்து நின்றதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

புலியின் குணம் கண்டு
காட்டுப் புலி குனிந்ததும்
மனிதப் புலி மிருகம் என்று
ஊர் கூடிச் சொன்னதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

'ஷகீது'களுக்காய்
காத்திருந்த சுவனத்தில்
'ஷுஹதா'க்கள் நுழைந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

செந்நீர் வடிந்தும்
கண்ணீர் வடிக்காத
பாலகர் இறந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

தொழுகைத் தளங்களில்
இரத்தம் வடிந்ததும்
ஹசன் ஹுசைன்கள்
ஷஹீதாய் ஆனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

பள்ளி நிலம்
செம்மையானதும்
வெள்ளி நிலா
வெளிறிப் போனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

அந்த இரவிலே
காத்தான்குடி அழுதது
கப்றுக்குழி அழுதது

ஷுஹதாக்களால்
சுவனம் நிறைந்தது
ஷஹீதுகள் இன்றி
பூமியும் அழுதது

ஒரு சில இரவுகளில்
நாணும் அழுவதுண்டு
அந்த ஒரேயொரு இரவுக்காய்

பல நாள் கண்ணீர்
அன்று கவிதையாய் எழுந்தது
நேற்று இரவுக் கண்ணீரில்
பாதிக்கவி கரைந்தது
மீதிக் கவி இன்று
உங்களுக்காய்

அந்த இரவில்
பூக்களும் அழுதன
என்னோடு
என் கவிதையும் அழுதது

கல்நெஞ்சக் காறரே!
இன்றேனும் கொஞ்சம்
அழுது விடுங்கள்
இன்றைய இரவில்
காத்தான்குடியை
மீட்டிப் பார்ப்பேன்

2009-11-19

கொடிகள் பறக்கின்றன‌


Share/Bookmark


சிங்கள பூமியிலே
சிங்கக்கொடி பறக்குது
சிவந்த மண்ணிலே
சிரித்து விளையாடுது

கேட்ட தேசத்திலன்றி
கேளா தேசமனைத்திலும்
புலிக்கொடி பறக்குது
புனர்வாழ்வு கேட்குது

2009-11-13

கவிதாறுதல்


Share/Bookmark


கண்ணாடி பார்த்தேன்
முகம் அந்நியமானது
பாதையில் நடந்தேன்
செருப்பே அறுந்தது

புற்களில் படுத்தேன்
முள்ளாய்த் தைத்தது
பூக்களை மணந்தேன்
தும்மலே வந்தது

மரத்திலே அமர்ந்தேன்
கொப்பு முறிந்தது
தண்ணீர் அருந்தினேன்
உப்புக் கரித்தது

காற்றோடு பேசினேன்
பேச மறுத்தது
காதல் செய்தேன்
கசப்பாய் இருந்தது

காகிதம் கிழித்தேன்
வெள்ளையாய் இருந்தது
பேனையை எடுத்தேன்
தானாய்த் திறந்தது

மூளையைக் கசக்கினேன்
கவிதை சிரித்தது
கவிதையை எழுதினேன்
காகமும் சிரித்தது

மரம் பணிந்து அழைத்தது
மூக்கைத் தேடி பூவே வந்தது
தண்ணீர் தேனாய் இனித்தது
செருப்பு என்னையே சுமந்தது

புற்கள் மெத்தையாய் ஆனது
கண்ணாடி என்னைப் பார்த்தது
என்னோடு காதல் கலந்தது
காற்று காதோரம் இசைத்தது

2009-11-16

நான் வாழ்வதற்கு


Share/Bookmark


தசரதனைப்போல்
மனைவிகள் தேவையில்லை
காந்தாரி போல்
குழந்தைகள் தேவையில்லை

கண்ணனைப்போல்
அவதாரங்கள் தேவையில்லை
கர்ணனைப்போல்
புண்ணியங்கள் தேவையில்லை

சுற்றிலும் இயற்கை
சூழ்ந்திருக்க வேண்டும்
அன்னையும் பிதாவும்
அருகிருக்க வேண்டும்

அன்பிற்கொரு மனைவி வேண்டும்
ஆசைக்கொரு குழந்தை வேண்டும்
குடியிருக்க குடிலொன்று வேண்டும்
கோமணமேனும் கட்டியிருக்க வேண்டும்

இன்பத் தமிழ் வந்து காதில் பாய வேண்டும்
இஸ்லாத்தோடு சேர்ந்திருக்க வேண்டும்
இலக்கியத்தில் மூழ்க வேண்டும்
இறையருள் கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை முடியும்வரை
வண்ணக் கவிதைகளும்
இன்பத் தமிழ் மொழியும்
காதோரம் கேட்க வேண்டும்

கடைசி நேரம் வர
கடமை முடிந்திருக்க வேண்டும்
'கலிமா' வாயில் வர வேண்டும்
கண்ணியமான மரணம் வேண்டும்

2008

கவிஞன்


Share/Bookmark


மலர்ந்தும் மலராத பாதி மலர்
மலரும் வரை காத்திருப்பான்
விடிந்தும் விடியாத விடியல்
விடியும் வரை விழித்திருப்பான்

கண்டும் காணாத காட்சியை
கற்பனை செய்திடுவான்
புரிந்தும் புரியாத வரிகளை
புனைந்து வரைந்திடுவான்

கனத்தும் கனக்காத கருவின்
கனத்தை அறிந்திடுவான்
வளர்ந்தும் வளராத பிஞ்சு
மனதையும் உணர்ந்திருப்பான்

வளைந்தும் வளையாத மூங்கில்
வளைவினை இரசித்திருப்பான்
பிரிந்தும் பிரியாத பிரியன்
பிணத்தைப் பாடிடுவான்

வலித்தும் வலிக்காத வசை
வரைந்து வைத்திடுவான்
வடிந்தும் வடியாத சொல்லில்
வடிவமே அமைத்திடுவான்

2008

தொண்ணூறை மீட்கட்டும்


Share/Bookmark
அகதி நாமம் கொண்ட
ஆன்மீகக் கவிஞன்
அகத்திமுறிப்பானின்
ஆசை மகன் நான்

வேத்திய நாமம் கொண்ட
வேங்கைக் கவிஞன் நான்

தாய் மொழியாய்
தமிழைக் கொண்டு
வடக்கையே என்
தாயாய்க் கொண்டு

நான் எழுதும் இவ்வரிகள்
தொண்ணூறை மீட்கட்டும்

பதினெட்டாண்டுகள்
பழமை வாய்ந்தும்
பளிச்சென்று தெரியும்
பழங்குடிக் கதையையும்
பாழ் கிணற்றில் நாம் வீழ்ந்து
பாழாய்ப்போன கதையையும்

நான் எழுதும் இவ்வரிகள்
நன்றாகவே மீட்கட்டும்

பத்தடித் தூண் கட்டி
அரைவட்ட வாசல் இட்டு
வண்ணமாய் நிறந் தீட்டி
பச்சை நிறச் சுவர் காட்டி

வாவென்று அழைத்திடவே
'பாங்கு' சொல்லும் பள்ளிகள்
வழமையாகச் சொல்லுது 'பாங்கு'
வானுயர எல்லோர் ஊரிலும்

போவென்று சொன்னதாக
சரித்திரம் இல்லை
வந்தோரைத் தடுத்ததாக
வாக்கியங்களும் இல்லை

தொண்ணூறைத் தவிர
ஏனைய நாட்களிலே

' இரு மணித்தியால அவகாசம்
உயிர் பிழைக்க உங்களுக்கு
ஓடிச் செல்லுங்கள்
ஊர் எல்லை தாண்டி'
'மோதினார்' மூக்காலே பேசுகிறார்
என்னுயிர் பிழைக்க
நானும் ஓடுகிறேன்

ஊர் மக்கள்
ஒன்றுகூட நேரமில்லை
ஒன்றுவிடாது
அடுக்கி எடுக்க நேரமில்லை
உடுத்த உடையோடு
உடுக்க உடை எடுத்து
வாலிபர்கள் சுமக்க பெண்களும் போறார்
கர்ப்பினிகளுடன் தாய்மாரும் போறார்
தந்தையோடு மகனும் போறார்
மகனோடு தந்தையும் போறார்
போன தந்தை திரும்பிப் பார்க்கிறார்

தாய் படுக்கும் இடம் பார்க்கிறார்
நாயும் பயந்து ஒதுங்குகிறது
பிறந்த மண்ணைப் பார்க்கிறார்
வளர்ந்த காலம் மீட்கிறார்
வஞ்சினம் கொள்கிறார்
பயனில்லை நடக்கிறார்

ஏ வடக்கின் வாலிபர்களே!
முடிச்சு தூக்கியதால்
முதுகெலும்புகள் வளைந்தனவோ
அன்றி
ஆன்மீகம் குறைந்ததனால்
ஆண்மையையும் இழந்தீரோ

வேளை வந்துவிட்டது
புறப்படுவோம் நாம்
நம் தாயகம் காக்க

2008-11-03


எங்கள் தேசம் (ஜுலை 15-31, 2009) 153 வது இதழில் வெளிவந்த கவிதை

அமைதியாய் ஆர்ப்பரிப்போம்


Share/Bookmark


உம்மா . . . .
உன்னைத் தினம் காண்கிறேன்
உன் அகத்தின் அழகு
முகத்தில் தெரியுதும்மா

இன்னும் என்னை
குழந்தையாய் நினைக்கிறாய்
இரவு பகல் அழுவதை
அகத்தினிலே புதைக்கிறாய்
முகத்தினிலே சிரித்து
உன்னை மழுப்புகிறாய்

கண்ணீர் நனைத்த
முந்தாணையை முட்டியில்
விழுந்ததென்கிறாய்
நம் வீட்டு முட்டியில்தான்
உப்பு உற்பத்தியா?

எந்தையை வாட்டும் அந்த
உன்னதக் கவலைதான்
உன்னையும் வாட்டுதா?
ஊருக்குப் போகத்தான்
உன் உள்ளம் ஏங்குதா?

ஊரைப் பற்றி நானறிவேன்
எந்தையவன் உளறிவிட்டான்
விரட்டியோரைச் சொல்லிவிட்டான்
கயவர்களைக் காட்டி விட்டான்

உன் அழுகை புலம்பலெல்லாம்
என் ஏட்டில் கவியாகும்
நீ வடிக்கும் விழிநீர் சொட்டும்
என் பேனை மையாகும்

நான் எழுதும் ஓரெழுத்தும்
வன்னிக்குப் போர் தொடுக்கும்
போர் தொடுத்த இடமெல்லாம்
நம்மவர்க்கு உரித்தாகும்

எந்தையின் எழுத்தெல்லாம் வான்படை
உன் விழி கொட்டும் நீர் கடற்படை
என் எழுத்து, கவியெல்லாம் தரைப்படை
மொத்தம் முழுப் போரில் அமைதிப்படை
2009-10

ஏனும்மா . . . .


Share/Bookmark


ஏனும்மா . . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் அருந்தியதெல்லாம்
வெளிநாட்டில் வெந்த மாவை
வெள்ளையாய்க் கரைத்த
கரைசலும்மா வெறும்
பசிக்குத் திருப்தியும்மா

சொந்த ஊரில்
சொந்தப் பட்டியில்
எந்தை கறந்த பாலை
சூடாக்கி மோராக்கி
நீயருந்திப் பாலாக்கி
எனக்கூட்டலியே

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
தரும்போதும் தடுக்கலியே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் படுத்த திண்ணையெல்லாம்
தந்தைக்குச் சொந்தமில்லை
தற்காலிகத் தரிப்பிடம்தானே

எந்தையவன் தந்நாட்டில்
சொந்த நிலம் இல்லையா?
இருந்தும் இடமில்லையா?

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
கால் நீட்ட மறுக்கலையே

நான் குளித்ததெல்லாம்
நிறமில்லா நீரில்தானே
எம் முன்னோர் தாண்டெழுந்த
பெருங்காட்டுக் குளமல்லே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்
மூத்தவன் பெற்ற இன்பம்
காலில் துளியும் எனக்கில்லை.

2009-10

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் வெளியிட்ட 'தமிழ் நயம் - 2009' இதழில் வெளிவந்த கவிதை

Tuesday, May 28, 2013

அந்த மாநாட்டில் நான் வரையப்படுகிறேன்


Share/Bookmark



அதோ ஒரு மாநாடு
......
நிலவை வரைவதுதான்
அவர்கள் தீர்மானம்

ஒரு அகண்ட காகிதம்
..........
எனது வெளிகளைப் போல
வெண்மையாகவும் வெறுமையாகவும்


அதோ வரைய
ஆரம்பிக்கிறார்கள்

நிலாவென்று சொல்லி
ஒருவர் முட்டையை வரைகிறார்
அது அங்கீகரிக்கப்படுகிறது

வானம்
வர்னம் தீட்டப் படுகிறது
வந்தோர் வரவேற்றனர்

வாயிருந்திருந்தால்
.........
அந்த வானம்
அழுதிருக்கும்


வந்தவாரெல்லம் வரைந்து
வசதியானவாரெல்லாம் வைத்து
வானம் அழகாகிவிட்டது


பாவம் அந்த நிலவு
பக்குவமாய் மறைக்கப் பட்டது

முழு நிலவை
முட்டையாக்கி
........
முட்டை நிலவை
மூடிமறைத்து

பிழைகளில்லாமல்
பிரதிகளடித்து

பின்னிரவாய்ப் பார்த்து
வினியோகம் செய்து

விடியலின் மடியில்
விரைந்து படுத்தனர்

பிரதிகள்
காற்றில் அடிபட்டு
பின்னொரு நாளில்
நிலவில் படிந்தன‌

விந்திற் பிறந்த
வீணர்களுக்காய்
வின்னே வாழ்வான  வென்னிலவு
விம்மி விம்மி அழுகிறது

நாய்களைத் திட்டலாம்
நாயகம் தடுத்து விட்டார் ***

அதோ
அந்த அகதிநிலா
தனது வெளிகளில் மௌனிக்கிறது

28 05 2013


*** யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதையே பேசட்டும் இல்லையேல் வாய் மூடி மௌனமாக இருக்கட்டும். (புஹாரி, முஸ்லிம்)

Thursday, February 7, 2013

ச(சு)கவாழ்வு


Share/Bookmark

தூயவன் திருப் பெயரைத்
துதித்தோம்பித் துவங்குகிறேன்

ஐக்கியம் அவன் செயல்

.............................
அவன் தூதைச் சுமந்தவர்
அவரைத் தொடர்ந்தோர்
அனைவர் மீதிலும்
அகில சாந்தியும்
தூய சமாதானமும்
தொடர்ந்து நிலவட்டும்

அவை தொல்பொருளாகிவிடக்கூடாது

...........................
ஐக்கியம்,சக வாழ்வு
சாந்தி நெறியின் சத்தியத் தூது

.......................
ஒரு விரல் அசைப்பதில்
ஆயிரம் கோளாறு
இரு கரம் ஏந்தினால்
எத்தனை கோளாறு

மூன்று நாள் விருந்து வைத்தால்
முப்பது கோளாறு
நாற்பதாம் நாள் வந்தால்
நாலாயிரம் கோளாறு

............................
கோளாரு மட்டுமே கண்டோம்
பல நூறு திசையில் சென்றோம்
கண்ணீரும் செந்நீருமே
கடைசியில் கண்டோம்

காணும் பிறையிலும்
கலவரம் கொண்டோம்

கத்தும் பாங்கிலும்
பத்தாய்ப் பிறிந்து
பகலிலும் நொந்தோம்

எனதென்றும்  உனதென்றும்
எத்தனை சொன்னோம்
எட்டய்ப் பிறிந்து
எழில் கெட்டு நின்றோம்

எட்டாக் கனிக்குக்
கொட்டாவி விட்டே
ஏமந்து போனோம்

இவன் பொய்யன்
அவன் பொய்யன்
என்று தினம் சொன்னோம்

பலகோடிப் பொய்யர் கூடிப்
பலன் என்ன கண்டோம்
பச்சோந்தி வாழ்க்கையிலே
பரிதாபமே எச்சம்

ஒன்றும் ஒன்றும்
இரண்டென்றாய்
இருபதென்றால் உனக்கென்ன‌

பதினொன்று என்பார்
பலகோடி என்றும் சொல்வார்
பைத்தியம் நீயேன்
பத்தாகப் பிரிந்தாய்

மண்ணிலே பிறந்து விட்டேன்
என்பதற்காய்
மண்ணூர்க் கவிஞன்
மனம் வருந்திப்பாடுகிறேன்

மடமைகளை என்னி,
மாற்று வழி தேடிக் களைத்து விட்டேன்

..............................
தினம் திட்டித் தீர்த்தது போதும்
தலை வெட்டிக்கொய்தது போதும்

தன் தந்தையின் மகனைத்
தானே தூற்றித் திரிந்தது போதும்
தாய் நாட்டை நாலாய்ப்
பிழ்ந்து கேட்பது போதும்

பொய் சாட்சிகள் சொன்னது போதும்
புறம் பேசிக்களைத்தது போதும்- தினம்
நாயாய்ச் செத்தது போதும்
நயவஞ்சகம் ஒழியட்டும் போதும்

..................
நல்லதோர் நாடு செய்வோம்- அதில்
நாயன் இறைவனை நன்றே தொழுவோம்
நாயகம் மொழியை நயமாய்ச் சொல்வோம்
நம்மை நாமே ஆண்டு மகிழ்வோம்

..................................
எரி ம‌லையாய் எல்லாம்எழுவோம்
வேற்றுமைச் சறுகைத் தினம் சுடுவோம்
ஒற்றுமைச்சுடர் வீசிப் பயில்வோம்

..............................
பேரணி நம் அணி - அதை
ஓரணி செய் வோம்
காரணியின்றியே
கரை தொட்டு மகிழ்வோம்

......................
உணர்ந்ததைத்தான்
நானுரைத்தேன்
உணரவேண்டுமென்பதற்காய்

கண்டும் காணாதவராய்
கவலையற்று வாழ்வோரே
கேளீர்..................

..........................
களாமிறங்கிக் களையகற்ற
களமேறிக் கொடியேற்ற‌
கவிபாடி வார்ரீர்

.............................
இல்லை

கற்பனைதான் வாழ்க்கை என்று
கடற்கரையில் கோட்டை கட்டி
கண்ணீரில் சாவீர்.............

என் கவிதைகளின்
சாட்சியத்தில்
நரகப் படுகுழியில்
வீழ்வீர்................

13102012


ஜாமீஆ நளீமிய்யாவில் ''சகவாழ்வு" எனும் தலைப்பில் 
இடம்பெற்ற மூன்று நாள் கல்வி முகாமில்
மேடயேற்றிய கவிதை 

தீவாய் ஆனாயே . . . .


Share/Bookmark



எத்தனை நாள் அழுதாயோ
ஈழத் திருநாடே
எனது அருந்தாயே
தீவாய் ஆனாயே

ஆரியர் வரும்போதும்
தீவாய் இருந்தாயே
யாரிழைத்த குற்றமடி
அன்றே அழுதுவிட்டாய்

வறுமையின் வாசலில் நான்


Share/Bookmark


என்னைவிடப் பெருவள்ளல்
பாரில் இல்லையென்பேன்

குடியிருக்க என் வீட்டை
வறுமைக்கே கொடுத்துவிட்டேன்
வாசலில் ஒதுங்கிக் கொண்டேன்

வறுமை என் வீட்டினுள் வாழுது
வறுமையின் வாசலில் நான்

வயதான தந்தையோடு
வறுமையும் படுத்துக் கொண்டது
வளம் குறைந்த தந்தைக்கு
வைத்தியச் செலவு கையிலில்லை

வடுப்பிடித்த கண்களை
வறுமை மூடிக் கொண்டதால்
வயதான தாயும்கூட
வளம் குறைந்து கிடக்கிறாள்

மூன்றே மாதத்தில் புது மனிதன்
வீட்டினுள் நுழைந்திடுவான்
மனைவிக்கு ஏழு மாதம்
வறுமை வந்து ஈரேழு வருடம்

குப்பி விளக்கில் என் பணம்
கொஞ்சமாய் எரியுதென்று இரவில்
விளக்கையும் அணைத்திடுவேன்
வறுமைக்கு அஞ்சி

வறுமைக்கு என்ன பிரியம்
என் வீட்டின்மீது
வந்து பலவருடமாச்சு - இருந்தும்
போக மறுக்குது பாவி

வறுமைக்கு என் வீடு
வசதியாய் இருந்திருக்கும்
வீட்டுக்குள் இருக்குது

வீட்டைவிட வாசலில் சுகம்
காற்று அதிகம் - ஆகவே நான்
வறுமையின் வாசலில்

வறுமை என் வீட்டுக்குள் வாழுது
வறுமையின் வாசலில் நான்




சிறு கற்பனையில் முளைத்த கவிதை ................
ச‌ட்டக் கல்லூரி கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை..............

2009-08-01

முஸ்லிம் தேசத்து முகவரி


Share/Bookmark



ஈழ முஸ்லிம் பெருந்தலைவ!
மனித குலப் பெருமேதை
மறைந்த மாமனித!
மர்ஹூம் அஷ்ரபுக்கு . . . . .

ஆண்டவன் அடியன்
அன்பனின் அஞ்சல் . . . . .

மர்ம ராத்திரியின்
மங்கிய இருளில்
உன் உதடுகள்
உச்சரித்திருந்தாலும் . . . .

அந்தக் கலிமாவை
அவன் மட்டுமே அறிவான் . . . . .

அந்த நாளின் அடையாளமாய் . . . . .

ஒரு தசாப்தம் முடிந்து
ஒற்றை வருடம் கழியும்போது
அர்த்தமுள்ள ராத்திரியில்
என் பேனையின் நினைவுகள்

எங்கள் தேசிய தொலைக் காட்சி
கப்றரை வரை காட்சி தர
நிச்சயமாய் வாப்பில்லை . . .

இறைவன் நாடவில்லையேல்
நீ அறிய வாய்ப்பில்லை. . . . . .

எங்கள் வளமும்
பூர்வீக நிலமும்
மீண்டும் பெற்றோம். . . ****

குரல் கொடுத்தும்
விரல் நீட்டியும்
ஆரம்பித்தவன் நீயன்றோ . . . . .

எத்தனை தலைமைகள்
எத்தனை சொன்னாலும்
முஸ்லிம் தலைமையை
முதலில் உணர்ந்த
மூத்தவன் நீயன்றோ . . . .. . .

ஊருக்கு ஒரு கட்சி
உன் பெயர் சொல்லியல்லவா
ஊர்வலம் போகிறார்கள்

சோதர!
உண்மையைச் சொல்
உந்தன் கட்சி எது? ? ?

நீ நட்ட ஆலமரத்தில்
பழுத்து விழுந்த ஆலம் விதைகள்
தனித்தனியே மரமாகி
பழமின்றி நிழலுமின்றி
பட்டமரமானதோடு . . . . . . .

நீ நட்ட முதல் மரமும்
மூச்சுத் திணறுவதறிவாயா? ? ?

முன்பெல்லாம்
பெரு விலங்குகள் நிழல் பெற்ற
எங்கள் மரங்களில்
சிறு கொடிகள் படர்வதால்
எங்கள் நிழல்களும்
மறுக்கப்பட்டிருக்கிறது . . . . .

தற்காலிகமோ நிரந்தரமோ
நீயறிவாயா சோதர ? ? ?

தலைவா!
நீ விட்டுச் சென்ற கடமைகள்
தொட்டுச் செல்லப்படவில்லை . . . .
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. . . .

உன்னுடைய பெயர் மட்டும்
உறுப்பமைய அச்சடித்து
உச்சரித்து மொழியப்பட்டு . . . .

தேர்தல் காலங்களில்
பருவகால ஏளத்தில் . . .
பக்குவமாய்ப் பயணிக்கிறது. . . . . .

****வடகிழக்கு முஸ்லிம்களின் சொந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வ‌ழங்கப்பட்டது. ......யுத்தத்தின் பின்

16-09-2000 மாம் ஆண்டு மரணித்த தலைவர்அஷ்ரப் நினைவாக 16-09-2011 ஆம் திகதி என் பேனை எழுதியவை.

பஞ்சாய்ப் பறந்த
அவர் உடலுக்கு
இது சமர்ப்பணம். . . . .
   2011-09-10

றமழான் இம்முறையும் வருகிறது


Share/Bookmark



2011-07-23
பாதையோரமாய்
பதமாய் வீசிப்போன
அருளில் கணத்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்குள்
ஏதோ கக்கிச் சென்றது.

பக்கத்து அகதி முகாமில்
ஓட்டை விழுந்த
ஓலைப் பள்ளியில்
புதிதாய் இரண்டு பாய்
இரண்டாம் வரியில் விரித்தார்களாம்
முதல் வரி நிறைவதற்கும்
இன்னும் இரண்டு பேர் தேவையாம்

பள்ளிக்குப் பக்கத்தில்
பாத்திமா தாத்தாவின்
பளிங்கு மாடியில்
பர்தாவொன்று காயுதாம்
வந்து போன றமழானில்
இரவுத் தொழுகையில்
பார்த்த ஞாபகமாம்

பிர்தௌஸ் நாணாவின்
பின் வாசல் முற்றத்தில்
ஓரிரு முஸல்லாக்கள்
ஓராண்டின் பின்
முழுகிக் கொண்டிருந்ததாம்.

இப்படியெல்லாம் நடந்ததாய்
அருளில் நிறைந்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்கள்
ஏதோ கதறியழுதது . .. . .

அயல் வீட்டு வாசி
அண்வர் மாமாவும்
கொழும்புக்குப் போய்
குர்ஆன் வாங்கி வந்ததாய்
கடைசி மகன் சொன்னான்

பள்ளி இமாம் வாழும்
பச்சை வீட்டுக்குப் போயிருந்தேன்
நாளையோ மறுநாளோ
அதுவும் சுத்தமாகிவிடும்
.....
அந்த தூரத்தில் கிடந்த
தூசு படிந்த குர்ஆன்

மந்தமான அந்த இருளில்
மஃரிபு வேளை முடித்திருந்தேன்
வெளுத்திருந்த நேற்றைய தாடிகள்
மாம்பழ நிறத்தில் பழுத்திருந்தன.

நேற்று வந்த அதே நேரம்
இன்றைய காற்றும் வந்தது
........
இரண்டு நாட்களில் றமழானாம்
அதுதான் அவ்வளவு கொண்டாட்டமாம்
அழுது கொண்டே சொல்லிச் சென்றது.

திரும்பிப் பார்த்தேன்
பத்து மீட்டர் நீளத்தில்
பட்டியலொன்று கிடந்தது
பேரீத்தம் பழம் என்று
முதல் வரி எழுதப்பட்டிருந்தது

போன றமழானும் இப்படித்தான்
பிறையோடு வளர்ந்த ஈமான்
பிறை தேயத் தேய்ந்தே போனது
பெருநாள் விடியலில்
அழிந்தே போனது

இரண்டு கோப்பைக் கஞ்சியும்
இலவசப் பேரீத்தம் பழமும்
நோன்பு காலக் கொண்டாட்டங்கள்
கடைசிப் பத்தும்
கடைத் தெருக்களின் முகவரிகளாய். . . . .

காலங் காலமாய்க்
கடந்து போகுது றமழான்

நீயும் உனதும் - இன்னும்
ஜாஹிலிய்யா கடந்து வந்த
கல்லாயுத காலத்தில்

ஆள்காட்டி விரலுக்காய்
ஆளைக் கொல்வதும்
கரண்டைக் காலுக்காய்
கழுத்தைத் திருகுவதும்
கடைசி ரகஅத்தில்
கையேந்துவதற்காய்
கண்டந் துண்டமாய் வெட்டுவதும் . . .

றமழான் காலங்களுக்கான
சிறப்புக் கொண்டாட்டங்கள்

அழைப்பு நிலங்களின்
அழகிய முன்மாதிரிகள்

கட்டுண்ட செய்த்தானும்
கண்டு களிக்கும்
கேவலக் கூத்துகள்

இருபத்தி ஏழாம் இரவு மட்டும்
புனிதமாய்ப் போன றமழானில்
மற்றைய நாள் நோன்புகளெல்லாம்
ஆகுமாக்கப்பட்ட ஹறாமானது

அதிசயக் குர்ஆனும்
ஆச்சரித்து அழுதிருக்கலாம்

நானழுத அந்த இரவில்
எனது பேனைச் சாயமும்
உப்புக் கரித்தது

வருகின்ற றழமானை
வரவேற்கும் என் சமூகம்
வழியனுப்ப மறப்பதேனோ?
வழி தவறி நடப்பதேனோ?

பள்ளிக்கு வருவதற்கு
பருவம் வரவேண்டுமாகலாம்
புனித நேரம் வரவேண்டுமா?

அன்னல் நபி தந்த
அமுதங்கள் இவைதானா?
இறைவன் சொன்ன
இறை நேசம் இவ்வளவா?

எரிந்து அணைந்த ஒரு நட்சத்திரம்


Share/Bookmark

2011-07-02

ஒஸாமா என்ற
ஓங்கிய கரங்கள்
ஒழிக்கப்பட்டதொன்றும்
ஓராயிரம் வருட
வரலாற்றுத் திருப்பமல்ல
வெறும் சாம்பல் சரித்திரம்

. . . . . .

எரிந்து அணைந்ததும்
எரி நட்சத்திரமானாலும்
விழுந்து அழிவதுதானே
விண்மீன்களின் விதி

. . . . . .

அண்ணல் நபியும்
அழிந்ததாய்த்தான்
எங்களின் வரலாறு

. . . . . .

எந்த உயிரும் எஞ்சியதாய்
இனி எஞ்சுவதாய்
எங்கள் வேதத்தில் கிடையாது.

. . . . . .

அகிலம் படைத்தவன்
அர்ஷே நடுங்கிய
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் (ரழி)
மையத்துச் செய்தியும்
நாங்கள் கேட்ட
மாறாத வரலாறுதான்

. . . . . .

வான்மறை கொண்டு வந்த
வானவரும் அழிந்து போகும்
அநித்திய உலகில்
நித்தியத்தில் உறங்குவதும்
நிதர்சனமான பொய்

. . . . . .

இரட்டைக் கோபுரம்
இடிந்து வீழ்ந்ததுதான்
சரித்திரத் தவறென்றால் . . . .

. . . . . .

பேராழியைப் பிரித்து
பேரணுக்களைப் போட்டு
பரிசோதனை நடத்தி
படிந்து கிடந்த கடலை
வானேறி வரச் செய்த (சுனாமி)
வக்கிரகத்தை என்னவென்பது.

. . . . . .

உத்தியோகபூர்வ
உயிர் படுகொலைகளும்
உடைகளகற்றி
ஊணுண்ணிகளை ஏவி
உடலைக் கொய்வதும்
உலக நாகரீகமா?

. . . . . .

ஒரு நட்சத்திரம்
எரிந்து விழுவதால்
வானம் பொய்த்திடுமா?
உலகம் இருண்டு போகுமோ?

. . . . . .

உங்கள் ஆயுதங்களில்
நீங்கள் கொண்ட ஈமானிலும்
எங்கள் ஈமானில்
நாங்கள் கொண்ட உறுதி வலிது.