Wednesday, August 28, 2013

விடை கேட்கிறீர், விடியல் தாங்குமா


Share/Bookmark
வந்தோம்
வரவேற்றீர்
வளர்ந்தோம்
வாழ்த்தினீர்

வரவு செலவு பார்க்காமல்
வசந்தம் செய்யச் சொன்னீர்
வசந்தம் செய்தோம்
வரலாறு பதிந்துகொண்டது

வள்ர் மரபு பேணி
வலீமாவுக்கு அழைத்தீர்
வந்தோம்
வயிறாறக் கரி வகை
வைத்தீர்

விடை கேட்கிறீர்
விடியல் தாங்குமா

வேத நூல் சொல்லி
வேற்றுமையில்லையென்றீர்
ஒற்றுமை என்று சொல்லி
ஓதித் தினம் வந்தீர்

நானாவாகவும்
நயத்தகு வாப்பாவாகவும்
நல்லுரை தினம் சொன்னீர்

நன்றிக் கவி பாட‌
நான் வந்திருக்கிறேன்

நயமான வார்த்தையில்லை
நன்றி சொல்ல மொழியுமில்லை
நானிக் குனிகிறேன்
நான் பாடக் கவியுமில்லை

கனவுகளை அடைய‌
கடல் கடந்து போகின்றீர்

வட்டமானது வாழ்க்கை
வருமுனையில் சந்திப்போம்
வரும் வரை காத்திருப்போம்.
22082013


தனது மேற்படிப்புக்காக மலேசியா செல்லும் ஆசிரியரின் பிரியாவிடையில் பாடியது

Saturday, August 17, 2013

பிறை சாஸ்த்திரம்


Share/Bookmark


சாத்திரம் பார்த்தோமென்று
சாட்சிகளை மறுத்ததொரு கூட்டம்
பிறை பார்த்தோமென்று
பிறிந்து சென்றது மறு கூட்டம்


14 08 2013

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கிண்ணியா  ஜம்இய்யதுல் உலமா முரண்பாடு குறித்து எழுதியது

வசந்தமே நீ மீண்டும் வா. . . .


Share/Bookmark

என் அருமைக் காதலரே
எகிப்து தேசப் புதல்வரே
ஏகத்துவம் சுமந்த சகோதரரே
ஏற்றம் மிகுந்த சுஹதாக்களே

உங்கள் வீதிகளில்
உஹதைக் காண்கிறேன்
உச்ச வெயிலிலும்
உறுதியை வியக்கிறேன்

கத்ரைக்
கல்பிலே ஏற்றோரே
பத்ரைப்
பார்த்தும் சிரித்தீரே

கபனோடு உங்களைக்
காணும் போதெல்லாம்
கண் குளிர்ச்சிதான் - ஏனோ
கண்ணீரும் வருகிறதே

ஏகன் அவனையே
ஏற்றிப் புகழ்கிறேன்
ஏழைக் கரம்
ஏந்திக் கேட்கிறேன்

வசந்தம் மீண்டும்
வந்தடையக் கேட்கிறேன்......


14 08 2013