பத்திகள்


Share/Bookmark

வருக வருகவே


நளீமியா நந்த வனத்திற்கு புது விதைகள் தேவையென்ற செய்தி சுமாத்ராவில் வெடித்த சுனாமியை போல இலங்கை முழுவதும் சட்டெனப் பரவி சூடு கண்டது.
வனத்தில் பூத்த மலர்கள் தன் மனத்தை தூதனுப்பி காற்றோடு விட்ட‌தில் காற்றும் கூட கொஞ்சம் தென்றலாய் மறி நாடு முழுதும் ஏவலை நோக்கிய அழைப்பை செய்தது.
மழையிலே விடிந்து மழையிலே முடிந்த மென் மழை நாள் மூன்றில் கடற்கரைக்குக் கொஞ்சம் தூரத்தில் மலையடிவாரத்தில் தொற்று நீக்கப்பட்ட விதைகள் இருநூற்றைம்பது குவிக்கப்பட்டன.
ஒவ்வொன்றாய்த் தரம் பிரித்து ஐம்பது விதைகள் அதி தரம் என்று என்னி எடுத்து நந்தவனத்தில் நடுவதற்காய் திகதியும் குறிக்கப்பட்டது.
...........
மே 09ஆம் திகதி ஒவ்வொரு விதையும் நடப்ப்ட்டாகிவிட்டது .
தண்ணீருக்குப் பதிலாய் கொஞ்சம் கண்ணீரும் சிந்தப்பட்டது.
கனவுகளுக்கப்பால் கவலைகள் புதைக்கப்பட்ட போதிலும் சில நேரம் கனவுகளிலும் கூட கவலைகள் கவிபாடிச் சென்றன.
துளிர் விடத் துவங்கும் விதைகளில்
ஒன்று உயரம்,
ஒன்று குட்டை,
மேலும் சில பட்சிகள் வந்தமரும் பழ மரம்,
சில முட்களை சொரியும் முள் மரம்,
நீண்டு வளர்ந்து நிழல் தரும் சில மரம்,
அகிம்சை சொல்லும் சில போதி மரம் .......
........
எது எப்படிப் போனாலும் நளீமியா நந்த வனம் நவ மரம் கொண்டு தன்னை அலங்கரித்தாகிவிட்டது.
......
வந்தாரை வாழ்த்தும் வளர் மரபில் பிறந்த என் பேனை மடல் எழுதத் துடித்தது.
மனிதர்களே வாரீர்...
வள்ளுவன் வசைத்த மரங்களை அழித்து...
ஔவை உமிழ்ந்த உதவா மரங்களை பொசுக்கி....
.....
வைரமுத்து பாடி வைத்த வளர் மரமாய் எழுவீர்... ..
வான் புகழ் பெரு மரமாய் உயர்வீர்.....
........
சூரியச் சுடர் பட்டுச் சாகும் தொழு நோய்ச் சமூகத்தின் தொற்று நீக்க நிழல் அள்ளிச் சொரிவீர்.....
நித்திய ஓடைகளில் நீர் பருகி,
நிரந்தர மரங்களில் நிழல் பெற்று,
நித்தியன் அவனைக் கண்பார்த்து
நீவீர் வாழ நான் வாழ்த்துச் சொல்கிறேன்,
வல்லவன் அவ்னையும் கேட்கிறேன்..
..
.....
கொஞ்சம் தூரத்தில் அழுகையொழி கேட்டு திடுக்கிட்டேன்,,,,,,,,,,,
பாவலன் பத்தியில் வாழ்த்திவிட்டான் என என் பல்லவிகள் அழுது கோண்டிருந்தன,,,,,,,



2012 05 09 ஆம் திகதி ஜாமிஆ நளீமியாவில் சேர்ந்து கொண்ட நண்பர்களை வரவேற்கும் நோக்கில் எழுதப்பட்டது.
2012 05 19

No comments:

Post a Comment