Tuesday, April 10, 2012

கண்ணியுன்னைக் கட்டியாள ஆசை


Share/Bookmark


என் கவிதைகளின்
பாடு பொருளே !!!
ஐநா சபையின் 
பேசு பொருளே !!!


கலிமா வாயில் வரும்
கடைசி வேளையிலும்
கண்ணியுன் மடியில் 
கள்ளமாய்த் தவழ ஆசைதான்.


அன்பு கொண்ட காரணத்தால்
ஆசை கொள்வதில் தவறென்ன ???
ஆழி சூழ் உன் மேனியை
அள்ளி முகர்வதில் பிழையென்ன ???


தலையில் முக்காடிட்டு
தாவணி மார்பிலிட்டு
மானம் காப்பதுதான் 
மன்மதன் ஆசையடி


அன்றி . . .


முக்காடிட்டு உன்னை 
மூர்ச்சையுறச் செய்வதல்ல
மூடி மறைத்துன் 
முழுச் சுயத்தை பறிப்பதல்ல‌


கடனில் மூழ்கி 
கஷ்ட நிலை கண்டாய்
பொருளாதரத் தடை கண்டு 
பொருளிழந்து நின்றாய்






உன்னைப் புணர்வதில்
போ ட்டி கொண்ட மாந்தர் 
உன் மேனி தவழ்ந்த‌
நகையள்ளிச் சென்ற‌தறிவாயா ???


மாற்றார் தந்த சீத‌னமும்
மாடிகளான கதைய‌றிவாயா ???


பத்தோடு எட்டாய்
பதினெட்டு சீர்திருத்தம்
செய்து பயன் என்ன ???


சேமமுற வாழ்ந்தாயா ???
செழிப்புற்று மகிழ்ந்தாயா ????




மண்ணினத்து மாந்தருக்கு 
மாறத யாப்பொன்று 
மறைவழி வந்து 
மாநபி சொன்னதறிவாயா ???


ஆயிரம் காலமாய்
அடிமைகளாயும் வாழ்ந்தோம்
ஆண்டுகள் பலதில்
அகதிகளாயும் வாழ்ந்தோம்


நாளைய நாளொன்றில் 
நாங்கள் ஆழ்வதற்காய் 
இன்னும் இன்னும் ஆசிக்கிறோம்
ஐ வேளை தொழுது யாசிக்கிறோம் . . .