Sunday, October 4, 2015

இந்த ஒக்டோபரோடு இருபத்தைந்து வயசாச்சு..


Share/Bookmark
யானை பிடித்து வந்து
யாழ் தேவியில் ஏற்றி
கோட்டையில் விற்று
கொடி கொட்டிய வனிகத்தை
பெருங்காட்டில் செய்து
பெருமை கண்ட பூமி

ஆளுக்காள் வயல் வெட்டி
ஆளாக்கு நெல் விதைத்து
அருவடையில் பங்கு வைத்து
அனுபவித்த பொன் பூமி

கடை வைத்துக்
காலம் கடத்தி

கட்டுக் குளத்தில்
கால் கழுவிக்
கடமை செய்து

தொண்மைக் குடிகளாய்
தொழில் செய்த பூமி

பொன்னர் வந்து
போங்கடா என்ற போது
வாயடைத்துத் திரும்பிய
வாழ வைத்த பூமி

இன்றோடு முடியும் என்று
இருக்கும் வரை நம்பி
இறந்து போன
என் பாட்டனார்
ஏர் பிடித்த பூமி

இழந்தோமே - தவிர
இழிந்தோமில்லை

ஈமானால் உயர்ந்தோம்
இனிதே மீண்டோம்

பாதகம் நடந்து
பல வருடம்
பறந்து போச்சு

இந்த ஒக்டோபரோடு
இனத்துவேசம் செய்த
ஈழப் பேடிகளின்
இழிவுச் செயலுக்கு
இருபத்தைந்து வயசாச்சு..
10112015

Tuesday, September 22, 2015

சமத்துவம் ஒழியட்டும்....


Share/Bookmark
சிகரட்டும்
சீனி போலையும்
ஒரே கடையில்
ஒன்றாக விற்பதுதான்.....
சமத்துவம் என்றால்....
சமத்துவம் ஒழியட்டும்....

20150905

சுகம்.... ஆனா ... சுகமில்லை.....


Share/Bookmark
மூக்கின் சுவர் 
முகத்தை தொடும் 
பள்ளத்தாக்கில் வந்தது 
பரு ஒன்று..

20150826



எப்படியோ தோற்றிருக்கிறேன்.


Share/Bookmark
ஓலையால் வேய்ந்த
ஓட்டைக் குடிசையாய்
ஒரு குசினி....

எட்டி எட்டி 
எத்தனை முயன்றிருக்கிறேன்...

எத்தனித்த பொழுதெல்லாம்
எப்படியோ தோற்றிருக்கிறேன்...........

கிடுகின் வழி வரும்
கீற்றைத் தொடும் முயற்சியில்.....

1210
08122014

தயவு செய்து தள்ளி இரு....


Share/Bookmark
தயவு செய்து
தள்ளி இரு....

நினைவில்
நீ வந்து..... 

தொழும் போது
தொல்லை செய்யாதே....

20150812

feeling அசௌகரியம்


Share/Bookmark
கட்டுக்கடங்காத
காளை மாட்டை
கக்கூஸ்ல போக சொன்னா
கதை முடியுமா.????

அது போல.....
கவட்டுல
காத்துப் பட
கட்டுன சாரத்தையும்
கலாசாரத்தையும் மாத்தி
கலிசான் போட சொன்னா.....

20150811

வில்லங்கங்கள்.


Share/Bookmark

வார்த்தைகளை 
வடி கட்டுவதற்குள் 
விழுந்து போகிறகி சில
வில்லங்கங்கள்.

20150811



feeeling கவிஞன்....


Share/Bookmark
கவலைகளைப் பதிவு செய்ய 
காகிதங்கள் இருந்திராவிட்டால்
சின்ன இதயம்
சிதறுண்டு போயிருக்கும்....

20150806

புறக்கணிப்பின் வலி


Share/Bookmark
புறக்கணிப்பின் வலி - ஒரு
புற்று நோயை போல
பற்றி உடலில்
பரவத் தொடங்குகிறது.

ஒரு உரையாடல் தேவை இல்லை..... 
ஒரு ஸலாம் தேவை இல்லை...... 
ஒரு ஸ்மைலியில்.......

குறைந்த பட்சம்...... 
ஒரு தம்ப்ஸ் அளவிலாவது....... 
புறக்கணிப்பின் நெடி 
பரவி விடாமல் தடுத்துக் கொள்ள முடிகிறது...

20150801

புனிதம் கெடுகிறது


Share/Bookmark
புண் பட்டு
புனிதம் ஆனவர்
சிலுவை சுமந்து
சிலையாய் ஆன பின்பும்.....
புத்தகச் சிலுவைகளை
பூக்கள் சுமந்து
புண் பட்டு
புனிதம் கெடுகிறது....


06092015


பிழைக்கிறது இந்தக் கணிதம்


Share/Bookmark
எப்படி செய்தாலும்
பிழைக்கிறது இந்தக் கணிதம்....
இனி....
என்னதான் செய்தாலும்
பிழைக்காது இந்த மனிதம்.....

0114
20150909




ஏங்குகிறது நெஞ்சுக்கூடு


Share/Bookmark
எண்ணி எண்ணி தினம் 
ஏங்குகிறது நெஞ்சுக்கூடு....
எப்படி அழுதிருக்கும்
என் இஹ்வானிய நாடு...

1448
09092015

Wednesday, May 6, 2015

இலங்கையில் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை.


Share/Bookmark
திரையரங்குகளில் சங்கமமாகும்
தீனின் புதல்வர்களென்றும்....

மதுக்கடையில் மண்டியிடும்
மார்க்கச் சகோதரர்களென்றும்...

சந்தையில் சண்டையிடும்
சமூகத் தொண்டர்களென்றும்...

போதைப் பொருளில் புதைந்து போகும்
பொரறுமையின் சிகரங்களென்றும்...

இண்டர் நெட்டில் இழிந்து போன
ஈமானிய உள்ளங்களென்றும்...

அரசியல் அடியாளான
அடிமைப் பேடிகளென்றும்...

கண்டதெல்லாம் காட்சியாக,
கொண்டதெல்லாம் கொள்கையாக,
மண்டைக்கு சம்பந்தமில்லாமல்,
தொண்டையால் கத்தித் திரியும்,

களிமண் பிண்டங்களென்றும்
கற்பனை செய்து....

இளைஞரைப் பற்றி
இழிவுக்கவி செய்கிறார்கள்...

இளைஞரென்றால்
இத்தனை கேவலமா...???
..........

இமாலயச் சாதனைகளை
இமைப் பொழுதில் முடிக்கும்
இலங்கைத் தாய் ஈன்ற
இளைஞர் குலம் பற்றி

இனிய கவி செய்து
இயம்புகிறேன் கேளுங்கள்...

சந்ததி உருவாக்கத்தில்
சாதனைகள் செய்பவன்,
சமகால இளைஞர்களென்று
சத்தியமிட்டுச் சொல்லுகிறேன்.

கடந்த காலம் நடந்த
கலவரத்தின் போது
காடையர்களை எதிர்த்து,
களத்தில் பலியாகி,
கண்மூடி ஷஹீதானவன்
கலிமா சொன்ன இளைஞன்...*

இஸ்லாமியம் பேசும்
இலக்கிய மாநாட்டில்,
சர்வதேச மேடையில்
சன்மார்க்கம் பேசியவன்
இலங்கையில் பிறந்த
இளைஞன் அஸ்மின்...**

முழு நேர ஊழியனாய்
முஹம்மதின் உம்மத்தை
முதுகில் சுமப்பவன்
முஸ்லிம் வாலிபன்...***
............

சத்திய மார்க்கத்தையும்
சமூக மாற்றத்தையும்
தலை மேல் தாங்கும்
தன்னலமற்ற சேவகன் யார் ? ? ?

ஷபாப் என்ற பெயரில்
சங்கம் அமைத்து
சமூகப் பணி செய்பவன் யார் ? ? ?****

வாமி எனும் பெயரில்
வருங்காலம் வளம் பெற
வகை வகையாய் உழைப்பவன் யார் ? ? ? *****

வாலிபர் சங்கம் இல்லாமல்
வளர்ச்சி கண்ட ஊருண்டா ? ? ?
பணிகள் செய்த
பள்ளி நிருவாகம் உண்டா ? ? ?

தங்கை தங்கையென்று
தனது வயதை மறந்து
திருமணம் செய்யாத
தியாகச் செம்மல்கள் யார்

தாய்க்கும் தாரத்துக்கும் மத்தியில்
தனியனாய்ப் போராடும்
தன்னார்வத் தொண்டனை

தட்டிக் கழிக்கவா
தம்பட்டம் அடிக்கிறீர்கள்......

சங்கத் தமிழ் செய்து
சன்மார்க்கப் பணி செய்யும் நான்
இப்புவியுலகில் இருக்கும் வரை
இம்மியளவும் விட மாட்டேன்

இளைஞர்களை வாழ்த்தி
இனிதே முடிக்கிறேன்...
15 02 2015

......................................................................................................................
* அளுத்கம கலவரம்
** கோலலம்பூர் சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு
*** full timers
**** ஜமிய்யதுஷ் ஷபாப்
***** world assembly of Muslim youth


........................................................................................................................................................
ஜாமிஆ நளீமியாவின் வெளிக்களப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் -2014- கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை.

Tuesday, May 5, 2015

இலங்கைக் கவிதையொன்று இரங்கல் பாடுகின்றது


Share/Bookmark
இதயம் உள்ளவரெல்லாம்
இது கண்டு அழுகின்றனர்.......

இதோ.....
இலங்கைக் கவிதையொன்று
இரங்கல் பாடுகின்றது.....

இல்லை...........

இந்தக் கவிதை
இன்னும் ஏதோ சொல்கிறது..........

நேபாளம்.....

நேர்ந்ததெல்லாம்
நேற்றைய கதை....

அடுத்த நொடிகள் உன்னை
அடைந்துகொண்டிருக்கின்றன..

அழுது முடித்துவிட்டு
ஆறுதலாக  நீ வர
அகிலம் காத்திருக்காது.......

ஹிரோஷிமாவுக்குப் பின்னர்தான்
ஹீரோவானது ஜப்பான்....

நசிந்து போன நகரங்கள்
நாளடைவில் மாறும்....
நாள்பட்ட துயரங்கள்
நாளையே தீரும்...

அகதிநிலா- 

.12.40am
28042015

Monday, April 27, 2015

ஏதோ சொல்ல வருகிறது


Share/Bookmark
பூமி ....
தன்னை அசைத்துக் கொள்வதும்
கடல்.....
தன்னை இரைத்துக் கொள்வதும்

எனக்கும் உனக்கும்
ஏதோ சொல்ல வருகிறது
..........
...........
அதுதான்....
அது நிகழ்ந்துவிடலாம்......

,,,,
அஞ்சிக்கொள்
அடுத்த நொடியாக
அது இருக்கலாம்.....

.....
அல்லது.....
......
.........

அது முடிந்துவிட்டதாக..........
....
அறிவிக்கப் படலாம்......

1240
28042015