Thursday, February 7, 2013

ச(சு)கவாழ்வு


Share/Bookmark

தூயவன் திருப் பெயரைத்
துதித்தோம்பித் துவங்குகிறேன்

ஐக்கியம் அவன் செயல்

.............................
அவன் தூதைச் சுமந்தவர்
அவரைத் தொடர்ந்தோர்
அனைவர் மீதிலும்
அகில சாந்தியும்
தூய சமாதானமும்
தொடர்ந்து நிலவட்டும்

அவை தொல்பொருளாகிவிடக்கூடாது

...........................
ஐக்கியம்,சக வாழ்வு
சாந்தி நெறியின் சத்தியத் தூது

.......................
ஒரு விரல் அசைப்பதில்
ஆயிரம் கோளாறு
இரு கரம் ஏந்தினால்
எத்தனை கோளாறு

மூன்று நாள் விருந்து வைத்தால்
முப்பது கோளாறு
நாற்பதாம் நாள் வந்தால்
நாலாயிரம் கோளாறு

............................
கோளாரு மட்டுமே கண்டோம்
பல நூறு திசையில் சென்றோம்
கண்ணீரும் செந்நீருமே
கடைசியில் கண்டோம்

காணும் பிறையிலும்
கலவரம் கொண்டோம்

கத்தும் பாங்கிலும்
பத்தாய்ப் பிறிந்து
பகலிலும் நொந்தோம்

எனதென்றும்  உனதென்றும்
எத்தனை சொன்னோம்
எட்டய்ப் பிறிந்து
எழில் கெட்டு நின்றோம்

எட்டாக் கனிக்குக்
கொட்டாவி விட்டே
ஏமந்து போனோம்

இவன் பொய்யன்
அவன் பொய்யன்
என்று தினம் சொன்னோம்

பலகோடிப் பொய்யர் கூடிப்
பலன் என்ன கண்டோம்
பச்சோந்தி வாழ்க்கையிலே
பரிதாபமே எச்சம்

ஒன்றும் ஒன்றும்
இரண்டென்றாய்
இருபதென்றால் உனக்கென்ன‌

பதினொன்று என்பார்
பலகோடி என்றும் சொல்வார்
பைத்தியம் நீயேன்
பத்தாகப் பிரிந்தாய்

மண்ணிலே பிறந்து விட்டேன்
என்பதற்காய்
மண்ணூர்க் கவிஞன்
மனம் வருந்திப்பாடுகிறேன்

மடமைகளை என்னி,
மாற்று வழி தேடிக் களைத்து விட்டேன்

..............................
தினம் திட்டித் தீர்த்தது போதும்
தலை வெட்டிக்கொய்தது போதும்

தன் தந்தையின் மகனைத்
தானே தூற்றித் திரிந்தது போதும்
தாய் நாட்டை நாலாய்ப்
பிழ்ந்து கேட்பது போதும்

பொய் சாட்சிகள் சொன்னது போதும்
புறம் பேசிக்களைத்தது போதும்- தினம்
நாயாய்ச் செத்தது போதும்
நயவஞ்சகம் ஒழியட்டும் போதும்

..................
நல்லதோர் நாடு செய்வோம்- அதில்
நாயன் இறைவனை நன்றே தொழுவோம்
நாயகம் மொழியை நயமாய்ச் சொல்வோம்
நம்மை நாமே ஆண்டு மகிழ்வோம்

..................................
எரி ம‌லையாய் எல்லாம்எழுவோம்
வேற்றுமைச் சறுகைத் தினம் சுடுவோம்
ஒற்றுமைச்சுடர் வீசிப் பயில்வோம்

..............................
பேரணி நம் அணி - அதை
ஓரணி செய் வோம்
காரணியின்றியே
கரை தொட்டு மகிழ்வோம்

......................
உணர்ந்ததைத்தான்
நானுரைத்தேன்
உணரவேண்டுமென்பதற்காய்

கண்டும் காணாதவராய்
கவலையற்று வாழ்வோரே
கேளீர்..................

..........................
களாமிறங்கிக் களையகற்ற
களமேறிக் கொடியேற்ற‌
கவிபாடி வார்ரீர்

.............................
இல்லை

கற்பனைதான் வாழ்க்கை என்று
கடற்கரையில் கோட்டை கட்டி
கண்ணீரில் சாவீர்.............

என் கவிதைகளின்
சாட்சியத்தில்
நரகப் படுகுழியில்
வீழ்வீர்................

13102012


ஜாமீஆ நளீமிய்யாவில் ''சகவாழ்வு" எனும் தலைப்பில் 
இடம்பெற்ற மூன்று நாள் கல்வி முகாமில்
மேடயேற்றிய கவிதை 

No comments:

Post a Comment