Saturday, December 29, 2012

சங்கே முழங்கு


Share/Bookmark
















07102011

நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்த விதைகள்
நாளை நிலைப்பது உறுதியில்லை
நாற்றிசை அதிர சங்கே முழங்கு

நின் முழக்கம் கேட்டு
திசைகள் நன் நான்கும்
திடுக்கிட்டெழட்டும்
திடமான நெஞ்சம் கொண்டு சங்கே முழங்கு

சரித்திரம் எமதென்றும்
சத்திரியர் நாம் என்றும்
சலிக்கா மொழி என்றும்
சத்தியம் கோடி செய்து சங்கே முழங்கு

வாயாற வாழ்த்து சொல்லி
வயிறாற கறி வகை செய்து
வந்தாரை வரவேற்கும்
வளர் மரபு எமதென்று சங்கே முழங்கு

எம் தமிழ் குன்றாதென்றும்
உன் தமிழ் மங்காதென்றும்
பைந்தமிழ் செம்மொழி என்றும்
செந்தமிழ் எம்மொழி என்றும் சங்கே முழங்கு

முக்கனியில் மூர்ச்சையுற்றோம்
மூவேந்தர் முரசுகள் கேட்டோம்
முந்தய கலைகள் முழுதாய்ப் பெற்றோம்
மூத்த மொழி தமிழ் கற்றோம்

ஆழ் கடலோடி
அரிதாய்க் கிடைக்கும்
ஆசைப் பொருளிலும்
அழகுத்தமிழ் பெரிதென்று சங்கே முழங்கு

Friday, December 28, 2012

அத்தியாயம் ஆரம்பம்


Share/Bookmark
















18122012
1. அதி தூயவன்
    அல்லாஹ்வின் பெயரால். . . .

    அவன்
    அன்பே உடையவன்
    அள்ளி
    அருளைப் பொழிபவன்

2. அனைத்துப் புகழும்
    அல்லாஹ்
    அவனையே சாரும்
    அவன்
    அகிலங்களின்
    அதிபதி

3. அவன்
    அன்பிற் பெரியவன்
    அளவிலா
    அருளே நிறைந்தவன்

4. அற்பரென்றாலும்
    அற்புதம் செய்தாலும்
    அள்ளி வழங்கும்
    அந்த நாளின்
    அதிகாரி

5. உருவமே அறியாமல்
    உன்னையே தொழுகிறோம்
    உன்னிடம் மட்டுமே
    உதவிகள் கேட்கிறோம்

6. உன்னை அடைந்திட
    உகந்த வழி காட்டுவாய்

7. உன் அருளையே
    உழைத்த
    உன்னதர் வழி உது
 
    உதில்
    உயர் பாதை தவறியோர்
    உன் கோபத்தை
    உண்டு வாழ்வோர்
    உலா வருவதில்லை

அன்பின் காதலியே!


Share/Bookmark


2012
உனதின் மீதான
காதலின் மிகைப்பில்
காவலன் எழுதுகிறேன்

கருமையாகிப் போன‌
உன் இரவுகளையெண்ணியே
கணதியாகிப்போயின
என் இரவுகள்

உன் மேனி தவழும்
ஆசையில் அழுகிறேன்

சலாகுத்தீன் மீட்ட
சரித்திர பூமியே

உன் மடியில் தவழவும்
உனக்காய் மடியவும்
கோடி சம்மதம்

கடுங் கோடையில்
கடல் வற்றுமெனில்
கடந்து வருவேன்

மண்ணெண்ணய்
மச‌கெண்ணெய்
மலிவாகிப் போகுமெனில்
பறந்து வருவேன்

சத்தியமாய் ........
உன்னை சிறை மீட்பேன்

இல்லை......
உனதின் மடியில்
செத்து மடிவேன்.

(விடுதியில்) நான் நலம்


Share/Bookmark



2011

தாயே!
உங்கள் தொலை பேசியை
துண்டித்து வையுங்கள்
தயவு செய்து
அழைப்பில் வர வேண்டாம்

முகத்தை தொலைவில் வைத்து
குரலைத் தனியாய் பிரித்து
ஜீரணிக்கும் சக்தி - என்
காதுகளுக்கு இல்லை

தந்தையே!
நான் நலமாகவே உள்ளேன்
என்னைக்காண
அடிக்கடி வர வேண்டாம்

விடை பெற்றுப்
போகும் உங்களை
பார்த்து பார்ர்த்து - என்
கண்கள் கனதியாகிப் போயின.
அடுத்த சந்திப்பில்
வெடித்துப் போகலாம்...

அல்ஹம்துலில்லாஹ்


Share/Bookmark














19112011
இந்த உலகில்
இயங்கும் இயல் ஒன்றும்
அவ்வளவாய் கஷ்டமில்லை
தாங்கும் இயலை விட‌

தாங்கும் இயலை
தந்தவனுக்கே புகழ் அனைத்தும்
அல்ஹம்துலில்லாஹ் - அவன்
இயங்கும் இயலை
இலகு படுத்திவிட்டான்.

Wednesday, December 26, 2012

வரலாறு பதியட்டும்


Share/Bookmark











2009.10

கடும் மழை கொட்டுகையில்
காசு பணம் கையிலின்றி
வெறும் கையோடு வந்தோமே
வெட்ட வெளியில் நின்றோமே
கற்பினிகள் நடுநடுங்கினர் 
கதி கலங்கினர் வயோதிபர்
கண்டு கொள்ளலியே
நீங்கள் கவலை கொள்ளலியே 

எல்லையற்ற எம்மூரை
நீர் நிறைந்த எம் குளத்தை
வளம் நிறைந்த எம் வயலை
வஞ்சகமாய்ப் பறித்தீரே

எம் மூத்தோர் வாழ்ந்;த ஊரிலும்
எமை விரட்டினீரே
என்னப்பன் பிறந்த வீட்டிலும்
பாட்டனை அனுப்பினீரே

நீர் வழியும் சிலர் வந்தோம்
பிணமாகவும் பலர் சென்றோம்
பாதை வழி பயந்து வந்தோம்
பணப் பெட்டி எனக் கவலை சுமந்தோம்

பட்டி எல்லாம் விட்டு வந்தோம்
பசுக்கன்றை நினைத்துருகினோம்
படு குளிரில் நடுங்கி நின்றோம்
பற் கடித்துத் தாங்கி நின்றோம்

கட்டில்; சுகம் விட்டுப் போனது
தொட்டில் மனம் அழுது நொந்தது
காட்டுக்குள்ளும் அழுது கேட்குது
காகக் குயிலும் கதறும் பசுவும்

காதல் விளையாடிய காடும்
கன்று குதித்தோடிய தெருவும்
கன்னியர் குளித்த பெரும் குளமும்
கற்றவர் பிறந்த காவல் பூமியும்

கடந்து நாங்கள் வந்தோமே
கடைத் தெருக்களில் நின்றோமே
கண்ணகி எரித்த மதுரை போல
கன்னியவள்; வன்னி அழுதாளே

பாதை நெடுகில் நீங்கள் நின்று
பரிகசித்துச் சிரித்தீரே
பையில் கிடந்த சில்லரையை
பாதை நடுவில் பறித்தீரே

பாதையிலும் இடமின்றி
பள்ளத்தில் வீழ்ந்தீரே
பாழ் கிணற்றை நம்பிப் போய்
படு குழியில் வீழ்ந்தீரே

பல்லக்கில் ஏற நினைத்து 
பாதையில் கிடப்பதென்ன
பஞ்சனையில் படுக்க நினைத்து
பாறைகளில் உறங்குவதென்ன

வசிப்பிடம் வரண்டு போனது
வருவாய்க்கு வழி ஏது?
வான் படைத்த வள்ளவன்
வழி வந்த கதி இது

சத்தியமாய் சொல்கிறேன்
நாம் சாபமிடவில்லை
மீண்டும் ஒரு சத்தியம் செய்கிறேன்
சத்தியமாய் அது சாபம்தான்


தொண்ணூரின் ஒக்டோபர்


Share/Bookmark


சிறுவர்களுக்காகவும் முதியோருக்காகவும் தினங்களை ஒதுக்கிக் கொண்ட அதே ஒக்டோபரில் துரத்தப்பட்ட சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் இந்தக்கவிதை சமர்ப்பணம் . . . . . . . . . .. . . . .


















04012011
சுதந்திரத்தின் இலக்கணம்
தவராக‌வே எழுதப்படும்
இந்த மண்ணில் - நன்
பிற‌க்கும் போதே அகதி

விடுதலையின் விரிவாக்கம்
பிழையகவே எழுதப்பட்ட
அந்த மண்ணில் - நான்
பிறக்காததால் அகதி

நான் அகதி என்பதை
உணர்ந்த போது
எனக்கு நானே
அந்நியம் ஆனேன்

காகிதப் பூக்களாய்
கவிதைகள் வரைந்தேன்
கவிதைகள் எனக்கு
ஆறுதல் சொன்

நாளை நாங்கள்
விரட்டப்படுவோமென‌
முன்னாள் இரவு
கன‌விலும் காணவில்லை

உதித்த சூரியன்
மறைவதற்குள்ளேயே
விழித்த நாங்கள்
தூக்கம் மறந்தோம் - வெறும்
துக்கம் சுமந்தோம்

எங்கள் முகவரி
முகாம் என்று
எழுதப்பட்ட போது
எங்கள் அமைச்சுகள்
அகதிகளாய்ப் போயின‌

எங்கள் அடையாளம்
அகதி என்று பதியப்பட்ட போது
அமைச்சின் அலுவலகம்
முகாம்களில் குடியேறியது


வெறும் வீதிகள் - எங்கள்
வீடுகளாயின‌
பெரும் வீடுகள் - இடிந்து
வீதிகளாயின‌

பெரும் உடல்க்ள்-இங்கு
அகதிகலயின
வெறும் உயிர்கள்-அங்கு
நாதைகள் யின

பெரியவன் தந்த
பேர்ருளால்
மீள் குடியேறி
மீண்டும் வழ்கிறோம்

மீள் குடியமர்த்த
மக்கள் இல்லையென
மீண்டும் விரட்டப்பட்டலாம்

ஆண்டாண்டு காலம்
வாழ்ந்த மண்ணை
மீண்டும் ஆள்வோமென


நம்பியே இன்னும்
நாவிரண்டு தசாப்தம்
நாமும் வழலாம்

நாம் இல்லவிடினும்
நமது சந்ததிகளேனும்
நூற்றண்டு விழாக் காணும்
தொண்ணூரின் ஒக்டோபருக்கு. . .

Saturday, December 22, 2012

அகதி நிலா


Share/Bookmark























2011
அதோ கடந்து செல்கிறது 
அந்திப்பொழுது.
அகதி நிலவொன்று
அடிவானில் கவிதை வரைகிறது.

தெண்ணோலை வழி வந்த
மெல்லிசையில் காது புதைத்து
முகவரியிழந்த நிலவொன்று
கவிதை நெய்கிறது.

வளர்த்தெடுத்த புலமையும்
பெற்றெடுத்த பெருமையும்
ஏதேதோ... கற்பனையில்...

ஆனாலும் அந்த
அகதிநிலா
இன்னும் கவிதை வரைகிறது.

தூரத்து சொந்தமெல்லாம்
வாய் மூடி யோசிக்க
வற்றாத சொந்தங்கள்
இன்னும் இன்னும் நேசிக்க

அதோ அந்த அடிவானில்
அகதி நிலவொன்று
இன்னும் இன்னும் கவிதை நெய்கிறது

......

அந்த நிலா என்ன.......

அடிவானை துளைக்கிறதா ? ? ?
ஆகாயம் தனதென்று மொழிகிறதா ? ? ?
ஆண்டவனை வேண்டி அழுகிறதா ? ? ?
அகதி என்ற அவலத்தை அழிக்கிறதா ? ? ?

இல்லை.... இல்லை....

அந்த நிலவு  
அகதிக்காற்றை நேசிக்கிறது.
அகிலம் தனதென்று யோசிக்கிறது.

இல்லை... இல்லை....
இல்லை........ இல்லை...........

இந்த அகதிக்காற்று
அடிவானில் கவிதை வரைகிறது.
சமூக நிழலின் விம்பம் கண்டு
கண்ணீர் வடிக்கிறது.

கடைசிக் துளியின்
கதை சொல்லி
கவிதை நெய்கிறது.

கடலோர அடிவானில்
அதோ ஒரு நவ ஓவியம் . . .
புது வாசம் . . .

அந்த அகதிநிலா
கவிதை வரைகிறது . . .
2011

ஒரு மின்மினியாய்...


Share/Bookmark


இணையம் முழுதும்
இருளையே கண்டேன்.
இறையைத் தேடி
இஸ்லாம் ஏற்றேன்.

ஏகனை உணர்ந்தேன்.
எல்லாம் துறந்தேன்.
எஞ்சிய வாழ்க்கையை
எழிலாக்க முயன்றேன்.

வாதம் செய்த
மேடை துறந்தேன்.
கவிதை வரைந்த
குடிலைப் பிறந்தேன்.

தமிழை உணர்ந்த
தரணி இழந்தேன்.
காதல் செய்த
பீடம்  மறந்தேன்.

கவிதைகளின் ஓசைகளில்
கர்ச்சணை செய்த
சிங்கம் ஒன்று

கவலைகளின் மௌனங்களில்
பல்லவி இயற்றிப்
பறந்தது அன்று.

ஒரே இரவில்
ஆயிரம் இரவுகளை
தனிமையில் கழித்தேன்.

எந்தை உணர்ந்த
ஏகத்துவம் உணர்ந்தேன்.

ஏட்டுத் தமிழை
எழில் செய்ய நினைத்தேன்.

எட்டிப்பிடிக்க
கைப்பிடி கேட்டேன்.

எட்டாத பலரின்
ஏளனம் கண்டேன்.

கண்ணீர் துடைக்க
கைக்குட்டை கேட்டேன்.

கவிழ்ந்தான் கதிரவன் - என
இருளைப் புகழ்ந்தனர்.


....

பீனிக்ஸ் பறவையாய்

மீண்டும் எழ

மரணம் இன்னும்
என்னைத் தொடவில்லை.

மீண்டும் ஒரு ஜனனம்
மின்னலாய் அல்ல
மின்மினியாய்.....

எனது மௌனம்
விரைவில் கலையும்
அது இறைவனுக்காக

எனது மரணம்
விரைவில் நிகழும்
அது ஈமானுக்காக


12052011

Friday, June 15, 2012

ஏன் இன்னும் என்னைத் தூசிக்கிறாய். .? ?


Share/Bookmark



உன் உதடுகளின்
உச்சரிப்புகளை
இன்னும் அந்தக் காற்று
ஜீரனிக்கவில்லை . . .

உன் பொறாமையும்,
தலைக்கேறிய கர்வமும்
ஒன்றையொன்று புண‌ர்வதில்
பிறக்கும் வார்த்தைகளை . . .

உன்னை ஈன்றெடுத்த
பரம்பரையின்
கல்லறைகளில் எழுதவும்
எனக்கு சம்மதமில்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

சாக்கடை வார்த்தைகளை
சுமந்து வருவதில்
காற்றுக்கு என்ன கஷ்டமோ . . . ? ? ?

இப்பொழுதெல்லாம் காற்று
என் வீட்டு பக்கம்
வருவதே இல்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?


நான் என்ன . . . ? ? ?


கடைப்பக்கமாய் போன தந்தையை
கடத்திச் சென்றேனா. . . ? ? ?

உன் மாளிகை முற்றத்தில்
மலம் கழித்தேனா . . . ? ? ?

உன் தொழுகைத் தளங்களில்
நாய்களைப் புணர்ந்தேனா . . . ? ? ?

உன் உத்தம மாதா
உடுத்த கடைசிப் பிடவையை
உன் களவி அறையில்
காட்சிக்கு வைத்தேனா. . . ? ? ?

உன் சிறுசுகளின் காகிதப் பூக்களை
கசக்கி எறிந்தேனா . . . ? ? ?

உன் இரவுகளை
தொல்லைகளால் நிரப்பினேனா. . . ? ? ?

உன் ஆடைகளகற்றி
அவையங்களறுத்தேனா? ? ?

அவப் பெயர் கூறியுன்னை
அகதியென்றழைத்தேனா. . . ? ? ?

உன் அடையாளம் அழித்துன்னை
அநாதையென்றுரைத்தேனா. . . ? ? ?

உன் உடமைகளொன்றேனும்
உனதில்லையென்றேனா. . . ? ? ?

இத்தனையும் செய்த
உன்னை மண்ணித்துவிட்டேனே . . . ? ? ?

இன்னும் ஏன்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

14122011

புளிய மரமே . . . ! ! !


Share/Bookmark



கிளைகள் பரப்பிய கர்வத்தில் 
விகாரமாய்த் தோன்றும் 
புளிய மரமே . . . ! - உன் 
புன்னகைகளை 
எங்கே தொலைத்தாய் . . . ? ? ?

ஈழ மண்ணில் புதையுண்டதா . . . ? ? ?
இஸ்ரேல் களவுகொண்டதா . . . ? ? ?
மேற்கத்தியத்தில் 
மயங்கித் தொலைத்தாயா . . . ? ? ?
மேன்மை நாகரீகத்தை 
நம்பி நாசமாய்ப் போனாயா . . . ? ? ?

ஆல மரமாய் நீயிருந்தால் 
உன் விழுதுகளை 
தூதனுப்பிக் கேட்டிருப்பேன் . . .

புளிய மரமாய் ஆனாயே . . . 

மரமே  . . !
உன் பூக்களுக்குச் சொல் . . . 
விதைகளை நோக்கி 
மீண்டும் செல்லுமாறு . . .

வரலாறு சொல்லும் 
எங்கள் வீரங்களை . . .
அவை அறிந்திருப்பதும் 
அரிதான ஒன்றுதான் . . . 

சென்ற நூற்றாண்டின் 
அவலங்களையேனும் 
அவை சொல்லட்டும்

என் கவிதைகளேனும் 
அவற்றை காகிதத்திலேந்தி 
இன்னுமொரு நூற்றாண்டுக்கு 
எத்தி வைக்கட்டும் . . . 

Friday, May 4, 2012

எனக்கு பாற்சோறு வேண்டாம்


Share/Bookmark

எனக்கு பாற்சோறு வேண்டாம்
வாழைப் பழங்களை
குப்பையில் போடுங்கள்
உங்கள் கூடாரங்களை
தீயூட்டி அழியுங்கள்

முப்பது வருடமாய்
முற்றிப்பழுத்த போரை
முடித்து விட்டதாய்
மொத்தமாய் ம‌கிழாதீர்கள்

வெரும் நிலத்தையும்
நிலத்தின் மீதான புற்களையும்
புற்களீன் மேலான மரங்களையும்
மீட்டி விட்டதில்
மகிழ்வதற்கு ஒன்றுமில்லை

விடியலின் மடியில்
குயிலின் கூவலும்
வெயிலில் வியர்க்கையில்
காக்கையின் கரையலும்
இரவின் இருளில்
கூகையின் குளற‌லும்

கொண்டாடி மகிழ்ந்து
கொண்டோடி மறைந்த
எந்தையின் தாயின்
மூத்த மேதைகளின்
மூச்சுக்கலந்த காற்றைத் தருவீரோ ???

அவர்
மூழ்கி எழுந்து
முழுக்ககற்றி
முந்தானை பிழிந்து
முழுதுமாய்  மறைத்து
கரையேரிப் போன‌
கால்தடம் பதிந்த‌
கரைகளைத்  தருவீரோ ???

ஈமானைச் சுமந்து
ஈரக்கரை வழியே
புத்தளத்து மண் வந்து
புதை குழிகளில் சங்கமித்தோரை
மீசான்களோடு அகற்றி
மீள்குடியேற்றுவீரோ ???

பலஸ்தீனம் எரிகையிலே
பாற்சோறு வேண்டாம்
பாலகர்கள் மரிக்கையிலே
பாற்சோறு வேண்டாம்
பள்ளி நிலம் அழிகையிலே
பாற்சோறு வேண்டாம்

எனக்கு பாற்சோறு வேண்டாம்
வாழைப் பழங்களை
குப்பையில் போடுங்கள்
உங்கள் கூடாரங்களை
தீயூட்டி அழியுங்கள்




Tuesday, April 10, 2012

கண்ணியுன்னைக் கட்டியாள ஆசை


Share/Bookmark


என் கவிதைகளின்
பாடு பொருளே !!!
ஐநா சபையின் 
பேசு பொருளே !!!


கலிமா வாயில் வரும்
கடைசி வேளையிலும்
கண்ணியுன் மடியில் 
கள்ளமாய்த் தவழ ஆசைதான்.


அன்பு கொண்ட காரணத்தால்
ஆசை கொள்வதில் தவறென்ன ???
ஆழி சூழ் உன் மேனியை
அள்ளி முகர்வதில் பிழையென்ன ???


தலையில் முக்காடிட்டு
தாவணி மார்பிலிட்டு
மானம் காப்பதுதான் 
மன்மதன் ஆசையடி


அன்றி . . .


முக்காடிட்டு உன்னை 
மூர்ச்சையுறச் செய்வதல்ல
மூடி மறைத்துன் 
முழுச் சுயத்தை பறிப்பதல்ல‌


கடனில் மூழ்கி 
கஷ்ட நிலை கண்டாய்
பொருளாதரத் தடை கண்டு 
பொருளிழந்து நின்றாய்






உன்னைப் புணர்வதில்
போ ட்டி கொண்ட மாந்தர் 
உன் மேனி தவழ்ந்த‌
நகையள்ளிச் சென்ற‌தறிவாயா ???


மாற்றார் தந்த சீத‌னமும்
மாடிகளான கதைய‌றிவாயா ???


பத்தோடு எட்டாய்
பதினெட்டு சீர்திருத்தம்
செய்து பயன் என்ன ???


சேமமுற வாழ்ந்தாயா ???
செழிப்புற்று மகிழ்ந்தாயா ????




மண்ணினத்து மாந்தருக்கு 
மாறத யாப்பொன்று 
மறைவழி வந்து 
மாநபி சொன்னதறிவாயா ???


ஆயிரம் காலமாய்
அடிமைகளாயும் வாழ்ந்தோம்
ஆண்டுகள் பலதில்
அகதிகளாயும் வாழ்ந்தோம்


நாளைய நாளொன்றில் 
நாங்கள் ஆழ்வதற்காய் 
இன்னும் இன்னும் ஆசிக்கிறோம்
ஐ வேளை தொழுது யாசிக்கிறோம் . . .















Saturday, January 28, 2012

வடக்கும் ஒரு குருவியும்


Share/Bookmark
அந்த வெளிகளில்
குருவி என்ன செய்கிறது...

எதையோ கொத்துகிறது..
எதையோ விழுங்குகிறது...

துள்ளி .. துள்ளி...
அதோ மீண்டும் கொத்துகிறது...

மெதுவாய் சிறகசைத்து
கொஞ்சம் மேலெழுந்து
அதோ மீண்டும் அமர்ந்துவிட்டது...

மீண்டும் கொத்துகிறது...
இலகுவாய் சத்தமிடுகிறது...

சுற்றி.. சுற்றி...
எதையோ தேடுகிறது...

ஐயோ!!!
நான் பார்ப்பதை
அது எப்படி கண்டது...

எனது பார்வை
அதன் சுதந்திர்த்தை
கொஞ்சமாய் எடுத்துக் கொண்டது
என்னவோ உண்மைதான்

ஐயோ!!!
என்ன பாதகன் நான்...

முழுமையான் சுத‌ந்திர‌ம் தேடி
அது மேலெழுந்து ப‌ற‌க்கிற‌தே...

முழுமையான் த‌னிமையை
வெறுமையான மௌன‌த்தை
என‌து நாட்டில் - அது
எங்கு போய் தேடும்

அது ப‌ற‌ந்த‌ திசையில்
வானத்தை பார்த்தேன்...

அது
இய‌ற்கையாக‌வேதான்
இருந்த‌து...

ஏதோ ஒரு ம‌கிழ்ச்சி...

அந்த‌க் குருவி
வ‌ட‌க்கு நோக்கிப் ப‌ற‌க்க‌வில்லை.....


நெருடல்களின் தொடராகிப் போன வடக்கை நோக்கிய குருவிக்கான என் பேனையின் சுப சோபனம்......