Wednesday, February 1, 2017

முதுகு கிழிந்த சட்டை


Share/Bookmark


கதவு மூலையில் கிடந்த
குதி நீண்ட ஒற்றைச் செருப்பு

சீப்புப் பற்களில்
சிக்கிக் கிடந்த ஒரு நீண்ட முடி

குப்பைக் கூடைக்குள்
கிழிந்து கிடந்த ஒரு ஆணுறை

கட்டிலில் கிடந்த
காய்ந்து கட்டியாகிய சில துளிகள்

போன்ற சில மிச்சங்கள்
போதுமாகியிருக்கின்றன
குற்றவாளியாக நான்
கூணடில் நிற்பதற்கு.

எனது சட்டையைப் பற்றி
யாரும் சட்டை செய்யாததால்
கிழிந்தது கிழிந்ததாகவே
கிடக்கிறது முதுகுப் பக்கம்.

30/01/2017

No comments:

Post a Comment