23-4-2014
ஏழு வானம் செர்ந்தழுக
எப்போது வெடிக்குமென
எல்லோரும் தவித்திருக்க,
எட்டி எட்டி நீர் மோதும்
எட்டாத குளக்கட்டில்
யானை வந்து நீர் குடிக்க
முதலை வந்து ஆள் பிடிக்க,
பாய்ந்தோடும் மீன் பிடிக்க
பகலெல்லாம் வலை இழுக்க,
பழுதாகிப் போகாமல்
பக்குவமாய் மழை தேக்கி
பருவமெல்லாம் நீர் பாய்ச்சும்
பருத்த பெருங்குலமே!
என்னைப் பிரசவிக்க
என் தாய்க்கு
இடமில்லையென்று
சொன்ன
இருமாப்பு நிலத்தில்.....
மீள்குடி என்றாலும்
மீன் பிடி என்றாலும்
உன்னை நம்பித்தான்
உணர்விழந்து வருகிறேன்
No comments:
Post a Comment