கிளைகள் பரப்பிய கர்வத்தில்
விகாரமாய்த் தோன்றும்
புளிய மரமே . . . ! - உன்
புன்னகைகளை
எங்கே தொலைத்தாய் . . . ? ? ?
ஈழ மண்ணில் புதையுண்டதா . . . ? ? ?
இஸ்ரேல் களவுகொண்டதா . . . ? ? ?
மேற்கத்தியத்தில்
மயங்கித் தொலைத்தாயா . . . ? ? ?
மேன்மை நாகரீகத்தை
நம்பி நாசமாய்ப் போனாயா . . . ? ? ?
ஆல மரமாய் நீயிருந்தால்
உன் விழுதுகளை
தூதனுப்பிக் கேட்டிருப்பேன் . . .
புளிய மரமாய் ஆனாயே . . .
மரமே . . !
உன் பூக்களுக்குச் சொல் . . .
விதைகளை நோக்கி
மீண்டும் செல்லுமாறு . . .
வரலாறு சொல்லும்
எங்கள் வீரங்களை . . .
அவை அறிந்திருப்பதும்
அரிதான ஒன்றுதான் . . .
சென்ற நூற்றாண்டின்
அவலங்களையேனும்
அவை சொல்லட்டும்
என் கவிதைகளேனும்
அவற்றை காகிதத்திலேந்தி
இன்னுமொரு நூற்றாண்டுக்கு
எத்தி வைக்கட்டும் . . .
No comments:
Post a Comment