Friday, June 15, 2012

ஏன் இன்னும் என்னைத் தூசிக்கிறாய். .? ?


Share/Bookmark



உன் உதடுகளின்
உச்சரிப்புகளை
இன்னும் அந்தக் காற்று
ஜீரனிக்கவில்லை . . .

உன் பொறாமையும்,
தலைக்கேறிய கர்வமும்
ஒன்றையொன்று புண‌ர்வதில்
பிறக்கும் வார்த்தைகளை . . .

உன்னை ஈன்றெடுத்த
பரம்பரையின்
கல்லறைகளில் எழுதவும்
எனக்கு சம்மதமில்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

சாக்கடை வார்த்தைகளை
சுமந்து வருவதில்
காற்றுக்கு என்ன கஷ்டமோ . . . ? ? ?

இப்பொழுதெல்லாம் காற்று
என் வீட்டு பக்கம்
வருவதே இல்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?


நான் என்ன . . . ? ? ?


கடைப்பக்கமாய் போன தந்தையை
கடத்திச் சென்றேனா. . . ? ? ?

உன் மாளிகை முற்றத்தில்
மலம் கழித்தேனா . . . ? ? ?

உன் தொழுகைத் தளங்களில்
நாய்களைப் புணர்ந்தேனா . . . ? ? ?

உன் உத்தம மாதா
உடுத்த கடைசிப் பிடவையை
உன் களவி அறையில்
காட்சிக்கு வைத்தேனா. . . ? ? ?

உன் சிறுசுகளின் காகிதப் பூக்களை
கசக்கி எறிந்தேனா . . . ? ? ?

உன் இரவுகளை
தொல்லைகளால் நிரப்பினேனா. . . ? ? ?

உன் ஆடைகளகற்றி
அவையங்களறுத்தேனா? ? ?

அவப் பெயர் கூறியுன்னை
அகதியென்றழைத்தேனா. . . ? ? ?

உன் அடையாளம் அழித்துன்னை
அநாதையென்றுரைத்தேனா. . . ? ? ?

உன் உடமைகளொன்றேனும்
உனதில்லையென்றேனா. . . ? ? ?

இத்தனையும் செய்த
உன்னை மண்ணித்துவிட்டேனே . . . ? ? ?

இன்னும் ஏன்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

14122011

No comments:

Post a Comment