Sunday, February 2, 2014

அதன் போது


Share/Bookmark













30122013



எனது இறுதி இலக்கு
ஒரு கவிதை எழுதுவது

அந்தக் கவிதையை
எழுதும் போது

இந்த வானுக்கு கீழே
நான் இருக்கக் கூடாது

இந்த மண்ணும் புற்களும்
என்னைச் சுமக்கவும் கூடாது

இந்த பூமி புறந்தள்ளும்
எந்த ஒன்றும்
என் வயிற்றறையில்
எஞ்சக் கூடாது
...............

நான் கவி எழுதும் தளமாக
நீரோடும் அருவியோ
நிரம்பி வழியும் குளங்களோ
இருந்து விடவே கூடாது

பாலும் தேனும்
பல வகை மதுவும்
அருவியாய் வளைந்தோட

அருகில் நானமர்ந்து
அந்தக் கவிதையை எழுத வேண்டும்

எந்தக் கண்ணும் கண்டிராத
நித்தியக் கண்ணுடைய
நிரந்தரக் குமரிகள்

எந்தக் காதும் கேட்டிறாத
இனிய குரல் கொண்டு
இசை சேர்த்துப் பாட வேண்டும்

அதன் போது

என் கவிதையின் பாடு பொருள்
என்னைப் பார்த்திருக்க

பௌர்ணமி இரவின் நிலவைப் போல
என் பாடு பொருளை
நான் பார்த்துக் கொண்டிருப்பேன்


No comments:

Post a Comment