இணையம் முழுதும்
இருளையே கண்டேன்.
இறையைத் தேடி
இஸ்லாம் ஏற்றேன்.
ஏகனை உணர்ந்தேன்.
எல்லாம் துறந்தேன்.
எஞ்சிய வாழ்க்கையை
எழிலாக்க முயன்றேன்.
வாதம் செய்த
மேடை துறந்தேன்.
கவிதை வரைந்த
குடிலைப் பிறந்தேன்.
தமிழை உணர்ந்த
தரணி இழந்தேன்.
காதல் செய்த
பீடம் மறந்தேன்.
கவிதைகளின் ஓசைகளில்
கர்ச்சணை செய்த
சிங்கம் ஒன்று
கவலைகளின் மௌனங்களில்
பல்லவி இயற்றிப்
பறந்தது அன்று.
ஒரே இரவில்
ஆயிரம் இரவுகளை
தனிமையில் கழித்தேன்.
எந்தை உணர்ந்த
ஏகத்துவம் உணர்ந்தேன்.
ஏட்டுத் தமிழை
எழில் செய்ய நினைத்தேன்.
எட்டிப்பிடிக்க
கைப்பிடி கேட்டேன்.
எட்டாத பலரின்
ஏளனம் கண்டேன்.
கண்ணீர் துடைக்க
கைக்குட்டை கேட்டேன்.
கவிழ்ந்தான் கதிரவன் - என
இருளைப் புகழ்ந்தனர்.
....

மீண்டும் எழ
மரணம் இன்னும்
என்னைத் தொடவில்லை.
மீண்டும் ஒரு ஜனனம்
மின்னலாய் அல்ல
மின்மினியாய்.....
எனது மௌனம்
விரைவில் கலையும்
அது இறைவனுக்காக
எனது மரணம்
விரைவில் நிகழும்
அது ஈமானுக்காக
12052011
No comments:
Post a Comment