நாளையே – அது
நடந்து விடலாம்
இன்று
இப்பொழுதே –ஒரு
இடியை போல்
அல்லது
அற்பமாக
அடுத்த கனமே
அது நிகழ்ந்து விடலாம்
ஆணி வேர்
அறுந்து போய்
அடியற்று விழும் – ஒரு
ஆல மரத்தை போல
பறக்கும் போது
பாரிசவாதம் வந்த – ஒரு
பறவையைப் போல
மின்சாரம் தடைப்பட்டு
மின் விளக்கனைவது போல
கல்லொன்று பட்டு
கண்ணாடி நொறுங்குது போல
இறுக்கமான முற் புதரிலிருந்து
இத்துப்போன துணியொன்றை
இழுத்து எடுப்பது போல
இன்றோ
இப்பொழுதோ
இன்னும் கொஞ்ச நேரத்திலோ
அல்லது
அடுத்த பொழுதொன்றிலொ
அது நிகழ்ந்து விடலாம்
10-12-2014
No comments:
Post a Comment