Thursday, December 18, 2014

பரீட்சை முடிந்துவிட்டது


Share/Bookmark

14112014


படர்ந்திருக்கும்
பணிக்கூட்டமே......
என்னைத் தேட வேண்டாம்
நான் வரமாட்டேன்
பரீட்சை எழுதிவிட்டேன்

ஓ......
ஒளிந்திருக்கும் நள்ளிரவே.......
நான் இனி வரமாட்டேன்
நன்றாக நீ உறங்கு

பரீட்சை முடிந்துவிட்டது

ஏ.....
ஜின்களே......
மிஹ்றாபுக்கருகில் வந்து
மீண்டும் தொழுங்கள்

புத்தகத்தோடு நான்
புகுந்து

தொழும் உங்களை
தொந்தரவு செய்ய மாட்டேன்

பரீட்சை முடிந்துவிட்டது.........

விழித்திருந்து
வீங்கிப் போன
விழிகளே..........

வின்மீன்களை  இனிப்
பார்க்க வேண்டாம்
பரீட்சை முடிந்துவிட்டது

ஏ.....
நாவல்களே.......
என்னைத் தழுவிக்கொள்ளுங்கள்
நான் வந்துவிட்டேன்

பழகும் நண்பர்களே.......
பக்குவம் உங்கள் செவிகள்
பாடப் போகிறேன்
பரீட்சை முடிந்துவிட்டது

கவிதை நூல்களே.......
கதவு திறங்கள்
காணமல் போனவன்
கதை பேச வருகிறேன்

ஏ......
காகிதங்களே விழித்திருங்கள்
கவிதைகளோடு வந்திருக்கிறேன்

ஏ........
என் எழுது கோளே
எழுந்து நில் - நான்
எழுதப்போகிறேன்..............

No comments:

Post a Comment