அமைதியான இரவொன்றுக்கான
அடிப்படைகள் அனைத்தையும்
அப்படியே கொண்டதாக
அத்தனை ரம்மியமாக
அந்த இரவு என்னை
அடைந்து இருந்ததாக
நான் ஆளமாக
நம்பியிருந்தேன்
அத்தனை கொடூரமாக
அந்த விருந்தின் போது
நான் புசிக்கப்படுவேன் என
நம்பவே முடியவில்லை
ஆனால்
அது
அப்படியே நடந்து முடிந்தது
அந்த இரவில்
அவித்து வைத்த வட்டிலப்பம் போல
எனது மாமிசத்தை
எல்லோருமாய் சுவைத்தார்கள்
………
அந்த நாளின்
அடர்த்தியான இரவின்
இறுதிப் பகுதியில்
இரத்தம் பட்டுக் காற்று
ஈரமாகியிருந்தது
அப்போது
அந்த இரவின் சாந்தி
அந்த இரவின் ரம்யம்
அந்த இரவின் அமைதி
அந்த இரவின் வியர்ப்பு
அழிந்து விட்டதாய்
நான் ஆழமாக
நம்பத்தொடங்கினேன்………..
...........
அந்த இரவின் அடர்த்தி
அந்த இரவின் அர்த்தம்
அந்த இரவின் மர்மம்
அந்த இரவின் கருமை
இன்னும் அதிகரித்ததாய்
இன்றளவும் நம்பியிருக்கிறேன்
அந்த இரவில்
எனது மாம்சத்தை புசித்த
அந்த நரப்பிசாசுகளின்
பல்லிடைகளில்
இன்னும் சில
இறைச்சித் துண்டுகள்
இறுகியிருப்பத்தை
ஈரமற்று சிரிக்கின்ற
இடை வேளைகளில்
இன்னும் காண்கிறேன்
அந்த அடர்த்தியான இரவு
அடுத்தடுத்த என் இரவுகளை
அதிகமாய் தொல்லை செய்தது
அதனை நான்
அணுவளவும் அனுமதிக்கவில்லை
அங்கீகரிக்கவும்
இல்லை
ஆமோதிக்கவுமில்லை
ஆனாலும்
அந்த இரவு
அத்தனை ஆவேசமாய்
என் அதிகரப் பரப்பில்
ஆதிக்கம் செலுத்துகிறது
அந்த இரவு
இன்றைய நாட்களின்
இரவுக் காற்றோடு
இன்னும் இன்னும்
இரகசியமாக ஏதோ பேசிக்கொள்கிறது
27-3-2014
No comments:
Post a Comment