2011-07-02
ஓங்கிய கரங்கள்
ஒழிக்கப்பட்டதொன்றும்
ஓராயிரம் வருட
வரலாற்றுத் திருப்பமல்ல
வெறும் சாம்பல் சரித்திரம்
. . . . . .
எரிந்து அணைந்ததும்
எரி நட்சத்திரமானாலும்
விழுந்து அழிவதுதானே
விண்மீன்களின் விதி
. . . . . .
அண்ணல் நபியும்
அழிந்ததாய்த்தான்
எங்களின் வரலாறு
. . . . . .
எந்த உயிரும் எஞ்சியதாய்
இனி எஞ்சுவதாய்
எங்கள் வேதத்தில் கிடையாது.
. . . . . .
அகிலம் படைத்தவன்
அர்ஷே நடுங்கிய
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் (ரழி)
மையத்துச் செய்தியும்
நாங்கள் கேட்ட
மாறாத வரலாறுதான்
. . . . . .
வான்மறை கொண்டு வந்த
வானவரும் அழிந்து போகும்
அநித்திய உலகில்
நித்தியத்தில் உறங்குவதும்
நிதர்சனமான பொய்
. . . . . .
இரட்டைக் கோபுரம்
இடிந்து வீழ்ந்ததுதான்
சரித்திரத் தவறென்றால் . . . .
. . . . . .
பேராழியைப் பிரித்து
பேரணுக்களைப் போட்டு
பரிசோதனை நடத்தி
படிந்து கிடந்த கடலை
வானேறி வரச் செய்த (சுனாமி)
வக்கிரகத்தை என்னவென்பது.
. . . . . .
உத்தியோகபூர்வ
உயிர் படுகொலைகளும்
உடைகளகற்றி
ஊணுண்ணிகளை ஏவி
உடலைக் கொய்வதும்
உலக நாகரீகமா?
. . . . . .
ஒரு நட்சத்திரம்
எரிந்து விழுவதால்
வானம் பொய்த்திடுமா?
உலகம் இருண்டு போகுமோ?
. . . . . .
உங்கள் ஆயுதங்களில்
நீங்கள் கொண்ட ஈமானிலும்
எங்கள் ஈமானில்
நாங்கள் கொண்ட உறுதி வலிது.
No comments:
Post a Comment