ஈழ முஸ்லிம் பெருந்தலைவ!
மனித குலப் பெருமேதை
மறைந்த மாமனித!
மர்ஹூம் அஷ்ரபுக்கு . . . . .
ஆண்டவன் அடியன்
அன்பனின் அஞ்சல் . . . . .
மர்ம ராத்திரியின்
மங்கிய இருளில்
உன் உதடுகள்
உச்சரித்திருந்தாலும் . . . .
அந்தக் கலிமாவை
அவன் மட்டுமே அறிவான் . . . . .
அந்த நாளின் அடையாளமாய் . . . . .
ஒரு தசாப்தம் முடிந்து
ஒற்றை வருடம் கழியும்போது
அர்த்தமுள்ள ராத்திரியில்
என் பேனையின் நினைவுகள்
எங்கள் தேசிய தொலைக் காட்சி
கப்றரை வரை காட்சி தர
நிச்சயமாய் வாப்பில்லை . . .
இறைவன் நாடவில்லையேல்
நீ அறிய வாய்ப்பில்லை. . . . . .
எங்கள் வளமும்
பூர்வீக நிலமும்
மீண்டும் பெற்றோம். . . ****
குரல் கொடுத்தும்
விரல் நீட்டியும்
ஆரம்பித்தவன் நீயன்றோ . . . . .
எத்தனை தலைமைகள்
எத்தனை சொன்னாலும்
முஸ்லிம் தலைமையை
முதலில் உணர்ந்த
மூத்தவன் நீயன்றோ . . . .. . .
ஊருக்கு ஒரு கட்சி
உன் பெயர் சொல்லியல்லவா
ஊர்வலம் போகிறார்கள்
சோதர!
உண்மையைச் சொல்
உந்தன் கட்சி எது? ? ?
நீ நட்ட ஆலமரத்தில்
பழுத்து விழுந்த ஆலம் விதைகள்
தனித்தனியே மரமாகி
பழமின்றி நிழலுமின்றி
பட்டமரமானதோடு . . . . . . .
நீ நட்ட முதல் மரமும்
மூச்சுத் திணறுவதறிவாயா? ? ?
முன்பெல்லாம்
பெரு விலங்குகள் நிழல் பெற்ற
எங்கள் மரங்களில்
சிறு கொடிகள் படர்வதால்
எங்கள் நிழல்களும்
மறுக்கப்பட்டிருக்கிறது . . . . .
தற்காலிகமோ நிரந்தரமோ
நீயறிவாயா சோதர ? ? ?
தலைவா!
நீ விட்டுச் சென்ற கடமைகள்
தொட்டுச் செல்லப்படவில்லை . . . .
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. . . .
உன்னுடைய பெயர் மட்டும்
உறுப்பமைய அச்சடித்து
உச்சரித்து மொழியப்பட்டு . . . .
தேர்தல் காலங்களில்
பருவகால ஏளத்தில் . . .
பக்குவமாய்ப் பயணிக்கிறது. . . . . .
****வடகிழக்கு முஸ்லிம்களின் சொந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. ......யுத்தத்தின் பின்
16-09-2000 மாம் ஆண்டு மரணித்த தலைவர்அஷ்ரப் நினைவாக 16-09-2011 ஆம் திகதி என் பேனை எழுதியவை.
பஞ்சாய்ப் பறந்த
அவர் உடலுக்கு
இது சமர்ப்பணம். . . . .
2011-09-10
No comments:
Post a Comment