Saturday, December 29, 2012

சங்கே முழங்கு


Share/Bookmark
















07102011

நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்த விதைகள்
நாளை நிலைப்பது உறுதியில்லை
நாற்றிசை அதிர சங்கே முழங்கு

நின் முழக்கம் கேட்டு
திசைகள் நன் நான்கும்
திடுக்கிட்டெழட்டும்
திடமான நெஞ்சம் கொண்டு சங்கே முழங்கு

சரித்திரம் எமதென்றும்
சத்திரியர் நாம் என்றும்
சலிக்கா மொழி என்றும்
சத்தியம் கோடி செய்து சங்கே முழங்கு

வாயாற வாழ்த்து சொல்லி
வயிறாற கறி வகை செய்து
வந்தாரை வரவேற்கும்
வளர் மரபு எமதென்று சங்கே முழங்கு

எம் தமிழ் குன்றாதென்றும்
உன் தமிழ் மங்காதென்றும்
பைந்தமிழ் செம்மொழி என்றும்
செந்தமிழ் எம்மொழி என்றும் சங்கே முழங்கு

முக்கனியில் மூர்ச்சையுற்றோம்
மூவேந்தர் முரசுகள் கேட்டோம்
முந்தய கலைகள் முழுதாய்ப் பெற்றோம்
மூத்த மொழி தமிழ் கற்றோம்

ஆழ் கடலோடி
அரிதாய்க் கிடைக்கும்
ஆசைப் பொருளிலும்
அழகுத்தமிழ் பெரிதென்று சங்கே முழங்கு

No comments:

Post a Comment