Wednesday, December 26, 2012

வரலாறு பதியட்டும்


Share/Bookmark











2009.10

கடும் மழை கொட்டுகையில்
காசு பணம் கையிலின்றி
வெறும் கையோடு வந்தோமே
வெட்ட வெளியில் நின்றோமே
கற்பினிகள் நடுநடுங்கினர் 
கதி கலங்கினர் வயோதிபர்
கண்டு கொள்ளலியே
நீங்கள் கவலை கொள்ளலியே 

எல்லையற்ற எம்மூரை
நீர் நிறைந்த எம் குளத்தை
வளம் நிறைந்த எம் வயலை
வஞ்சகமாய்ப் பறித்தீரே

எம் மூத்தோர் வாழ்ந்;த ஊரிலும்
எமை விரட்டினீரே
என்னப்பன் பிறந்த வீட்டிலும்
பாட்டனை அனுப்பினீரே

நீர் வழியும் சிலர் வந்தோம்
பிணமாகவும் பலர் சென்றோம்
பாதை வழி பயந்து வந்தோம்
பணப் பெட்டி எனக் கவலை சுமந்தோம்

பட்டி எல்லாம் விட்டு வந்தோம்
பசுக்கன்றை நினைத்துருகினோம்
படு குளிரில் நடுங்கி நின்றோம்
பற் கடித்துத் தாங்கி நின்றோம்

கட்டில்; சுகம் விட்டுப் போனது
தொட்டில் மனம் அழுது நொந்தது
காட்டுக்குள்ளும் அழுது கேட்குது
காகக் குயிலும் கதறும் பசுவும்

காதல் விளையாடிய காடும்
கன்று குதித்தோடிய தெருவும்
கன்னியர் குளித்த பெரும் குளமும்
கற்றவர் பிறந்த காவல் பூமியும்

கடந்து நாங்கள் வந்தோமே
கடைத் தெருக்களில் நின்றோமே
கண்ணகி எரித்த மதுரை போல
கன்னியவள்; வன்னி அழுதாளே

பாதை நெடுகில் நீங்கள் நின்று
பரிகசித்துச் சிரித்தீரே
பையில் கிடந்த சில்லரையை
பாதை நடுவில் பறித்தீரே

பாதையிலும் இடமின்றி
பள்ளத்தில் வீழ்ந்தீரே
பாழ் கிணற்றை நம்பிப் போய்
படு குழியில் வீழ்ந்தீரே

பல்லக்கில் ஏற நினைத்து 
பாதையில் கிடப்பதென்ன
பஞ்சனையில் படுக்க நினைத்து
பாறைகளில் உறங்குவதென்ன

வசிப்பிடம் வரண்டு போனது
வருவாய்க்கு வழி ஏது?
வான் படைத்த வள்ளவன்
வழி வந்த கதி இது

சத்தியமாய் சொல்கிறேன்
நாம் சாபமிடவில்லை
மீண்டும் ஒரு சத்தியம் செய்கிறேன்
சத்தியமாய் அது சாபம்தான்


No comments:

Post a Comment