சிறுவர்களுக்காகவும் முதியோருக்காகவும் தினங்களை ஒதுக்கிக் கொண்ட அதே ஒக்டோபரில் துரத்தப்பட்ட சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் இந்தக்கவிதை சமர்ப்பணம் . . . . . . . . . .. . . . .
04012011
சுதந்திரத்தின் இலக்கணம்
தவராகவே எழுதப்படும்
இந்த மண்ணில் - நன்
பிறக்கும் போதே அகதி
விடுதலையின் விரிவாக்கம்
பிழையகவே எழுதப்பட்ட
அந்த மண்ணில் - நான்
பிறக்காததால் அகதி
நான் அகதி என்பதை
உணர்ந்த போது
எனக்கு நானே
அந்நியம் ஆனேன்
காகிதப் பூக்களாய்
கவிதைகள் வரைந்தேன்
கவிதைகள் எனக்கு
ஆறுதல் சொன் னன
நாளை நாங்கள்
விரட்டப்படுவோமென
முன்னாள் இரவு
கனவிலும் காணவில்லை
உதித்த சூரியன்
மறைவதற்குள்ளேயே
விழித்த நாங்கள்
தூக்கம் மறந்தோம் - வெறும்
துக்கம் சுமந்தோம்
எங்கள் முகவரி
முகாம் என்று
எழுதப்பட்ட போது
எங்கள் அமைச்சுகள்
அகதிகளாய்ப் போயின
எங்கள் அடையாளம்
அகதி என்று பதியப்பட்ட போது
அமைச்சின் அலுவலகம்
முகாம்களில் குடியேறியது
வெறும் வீதிகள் - எங்கள்
வீடுகளாயின
பெரும் வீடுகள் - இடிந்து
வீதிகளாயின
பெரும் உடல்க்ள்-இங்கு
அகதிகலயின
வெறும் உயிர்கள்-அங்கு
அநாதைகள் ஆயின
பெரியவன் தந்த
பேர்ருளால்
மீள் குடியேறி
மீண்டும் வழ்கிறோம்
மீள் குடியமர்த்த
மக்கள் இல்லையென
மீண்டும் விரட்டப்பட்டலாம்
ஆண்டாண்டு காலம்
வாழ்ந்த மண்ணை
மீண்டும் ஆள்வோமென
நம்பியே இன்னும்
நாவிரண்டு தசாப்தம்
நாமும் வழலாம்
நாம் இல்லவிடினும்
நமது சந்ததிகளேனும்
நூற்றண்டு விழாக் காணும்
தொண்ணூரின் ஒக்டோபருக்கு. . .
No comments:
Post a Comment