2011
அதோ கடந்து செல்கிறது
அந்திப்பொழுது.
அகதி நிலவொன்று
அடிவானில் கவிதை வரைகிறது.
தெண்ணோலை வழி வந்த
மெல்லிசையில் காது புதைத்து
முகவரியிழந்த நிலவொன்று
கவிதை நெய்கிறது.
வளர்த்தெடுத்த புலமையும்
பெற்றெடுத்த பெருமையும்
ஏதேதோ... கற்பனையில்...
ஆனாலும் அந்த
அகதிநிலா
இன்னும் கவிதை வரைகிறது.
தூரத்து சொந்தமெல்லாம்
வாய் மூடி யோசிக்க
வற்றாத சொந்தங்கள்
இன்னும் இன்னும் நேசிக்க
அதோ அந்த அடிவானில்
அகதி நிலவொன்று
இன்னும் இன்னும் கவிதை நெய்கிறது
......
அந்த நிலா என்ன.......
அடிவானை துளைக்கிறதா ? ? ?
ஆகாயம் தனதென்று மொழிகிறதா ? ? ?
ஆண்டவனை வேண்டி அழுகிறதா ? ? ?
அகதி என்ற அவலத்தை அழிக்கிறதா ? ? ?
இல்லை.... இல்லை....
அந்த நிலவு
அகதிக்காற்றை நேசிக்கிறது.
அகிலம் தனதென்று யோசிக்கிறது.
இல்லை... இல்லை....
இல்லை........ இல்லை...........
இந்த அகதிக்காற்று
அடிவானில் கவிதை வரைகிறது.
சமூக நிழலின் விம்பம் கண்டு
கண்ணீர் வடிக்கிறது.
கடைசிக் துளியின்
கதை சொல்லி
கவிதை நெய்கிறது.
கடலோர அடிவானில்
அதோ ஒரு நவ ஓவியம் . . .
புது வாசம் . . .
அந்த அகதிநிலா
கவிதை வரைகிறது . . .
2011
No comments:
Post a Comment